என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீதா பயணம்"

    • ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.
    • ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது.

    ஐஷ்வர்யா அர்ஜுன் அம்மாவை சிறு வயதிலேயே இழந்து தன் அப்பா சத்யராஜ் வளர்ப்பில் நன்றாக வளர்ந்து பெரிய இடத்தில் இருக்கிறார். இவர் ஒருநாள் சமையல் கலை வல்லுனர் ஒருவரின் ஒர்க் ஷாப் ஒன்றிற்கு செல்கிறார்.

    அப்படி செல்லும் வகையில் நாயகன் நிரஞ்சனை சந்திக்கிறார். அவர் தன் ஊருக்கு போக லிப்ட் கேட்க, சீதாவும் லிப்ட் கொடுத்து அவருடன் பயணிக்கிறார். அப்படி செல்லும் வகையில் டீக்கடை, ஸ்கூல் குழந்தைகள், ரோட்டில் பழம் விற்பவர் என அனைவரையும் சந்தித்து நிரஞ்சனையும் அவர் ஊரில் இறக்கி விட்டு ஒர்க் ஷாப் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்.

    அப்படி அவர் ஒர்க் ஷாப் பில்டிங்கில் அருகில் வரும் போது கேஸ் லீக்கெஜால் அந்த பில்டிங்கே வெடித்து சிதற, ஐஸ்வர்யா அர்ஜுன் நொடி பொழுதில் உயிர் தப்பிக்கிறார்.

    20 நொடி தாமதமாக வர, பலரும் தன்னை தடுத்து நிறுத்தினார்கள், அவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என சீதா பயணத்தை தொடங்க பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். நடனமெல்லாம் சூப்பர். நிரஞ்சன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சுமித்ரா, கோவை சரளா, சரண் ஆகியோர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இயக்கம்

    வித்தியாசமான கதையை, பல படங்களில் பார்த்த காட்சிகளின் மூலம் எழுதி இயக்கி நடித்துள்ளார் அர்ஜூன். அடிதடியை குறைத்து, குடும்ப உறவுகள் மற்றும் காதலர்களின் அன்பை பதிவு செய்த இயக்குனர் அர்ஜூன், பல காட்சிகள் இது டப்பிங் படம் என்று சொல்வதை தவிர்க்க முயற்சித்து இருக்கவேண்டும்.

    ஒளிப்பதிவு

    ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது. அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்களில் தெலுங்கு வாடை. பின்னணி இசை கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

    • சீதா பயணம் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
    • அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

    நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். அதிரடி சண்டைக் காட்சி கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற அர்ஜூன் இடையில் சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதனிடையே அர்ஜூன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சீதா பயணம் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    இந்த நிலையில், அர்ஜூன் அளித்த சமீபத்திய பேட்டியில் ஏழுமலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசிய அர்ஜூன், "நான் முன்னதாக 3-4 படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் இப்போது அந்த வேடங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். ஏனென்றால் ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை. பலர் என்னை எப்போதும் பார்த்தது போல, வலுவான, நேர்மறையான வேடங்களில் பார்க்க விரும்புவதாக என்னிடம் சொன்னார்கள்.

    அதனால் இனிமேல், நான் ஹீரோ வேடங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஏழுமலை பார்ட் 2 கதை தயாராக உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம். இந்தப் படத்தின் கதை ரொம்ப சூப்பராக வந்துருக்கிறது. முழுமையாக சாப்பிட்டுவிட்டு என் வயிற்றைக் காட்டி சாதாரணமாக திரையில் தோன்றுவது எனக்குப் பிடிக்காது. மக்கள் என்னைப் பார்க்க தியேட்டருக்கு வருவதால் நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன்," என்றார்.

    • சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
    • இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

    இதனிடையே, 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' உள்ளிட்ட பல படங்களை அர்ஜூன் இயக்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் ஐஸ்வர்யாவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து 'சொல்லிவிடவா' என்ற படத்தை இயக்கி இருந்தார்.

    இதனை தொடர்ந்து, தற்போது 'சீதா பயணம்' என்ற புதிய படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் கதை மற்றும் திரைக்கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல், அர்ஜுன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

    காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 

     

    • மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
    • கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.

    ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.

    சீதா பயணம் படத்தில் மேலும் பிரகாஷ் ராஜ் , சத்யராஜ், கோவை சரளா மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படத்தில் கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ×