மணி ரத்னம் இயக்கத்தில் மீண்டும் இணையும் அபிஷேக் - ஐஷ்வர்யா?

‘தக்லைப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மணி ரத்னம் இயக்கத்தில் மீண்டும் இணையும்  அபிஷேக் - ஐஷ்வர்யா?
Published on

கமல்ஹாசன்  நடிப்பில் உருவாகி வரும் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும், மணிரத்னம் தயாரித்து இயக்கும் இந்த படம் இந்தியில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தி திரையுலகின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் இருவரும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் `ராவணன்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

குரு படத்தில் நடிக்கும்போது ஐஷ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே காதல் மலர்ந்தது தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யாராய் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டால், அபிஷேக்-ஐஸ்வர்யாராய் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இந்த தகவல் உண்மையாக இருந்தால் அபிஷேக் மற்றும் ஐஷ்வர்யா மணி ரத்னம் இயக்கத்தில் இணையும் மூன்றாவது திரைப்படமாக அமையும்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com