என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசா கட்டணம் உயர்வு"

    • விசா நிலையை பழைய கட்டணத்தில் மாற்றி கொள்ளலாம்.
    • எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வெளிநாட்டு பணியாளர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தி அதிபர் டிரம்ப் கடந்த மாதம் 19-ந்தேதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

    எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது அதிகளவில் எச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குதான் பொருந்தும் என்றும் ஏற்கனவே எச்-1பி வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

    இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதில், எப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் தங்களது விசாவை எச்-1பி விசா நிலைக்கு மாற்ற விண்ணப்பிக்கும்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நிலையைப் புதுப்பிக்க அல்லது நீட்டிக்க பழைய கட்டணத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வரும் சர்வதேச மாணவர்கள் உள்பட பல்வேறு வகை விசா வைத்திருப்பவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

    • விசா கட்டண உயர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கட்டண உயர்வு இந்திய மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

    விசா கட்டணம் மாற்றங்கள் குறித்த சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.1540) உயர்த்தப்பட்டுள்ளது.

    மாணவர் ஒருவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் (ரூ.13 ஆயிரம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்துக்கு வெளியே இருந்து மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டு களாகவும் (ரூ.50 ஆயிரம்), சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் (ரூ.12 ஆயிரம்) கட்டணம் உயரும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும், முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    பெரும்பாலான விசா வகைகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தும். இந்த விசா கட்டண உயர்வு வருகிற அக்டோபர் 4-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு கல்வி பயில இந்திய மாணவர்கள் அதிகளவில் விசாவுக்கு விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு இந்திய மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

    ×