search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defamation"

    • பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழக அரசு குறித்து அவதூறு பதிவு வழக்கில் ேபாலீஸ் நிலையத்தில் அர்ஜூன் சம்பத் ஆஜராகவில்லை.
    • வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கி ரமங்கலம் அருகே உள்ள கீழப்பட்டியைச் சேர்ந்தவர் சுமதி (வயது 38). இவரது வீட்டின் மீது தாக்குதல் நடந்தது.

    இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அர்ஜூன் சம்பத் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படு கிறது.

    இந்த பதிவு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில் கோவை யில் உள்ள அர்ஜூன் சம்பத் வீட்டில் நேற்று மதுரை மாவட்ட போலீசார் சம்மன் வழங்கினர்.

    அதன்படி இன்று காலை அர்ஜூன் சம்பத் செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக வில்லை. அவரின் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார்.

    பங்காரு அடிகளாரின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் அர்ஜூன் சம்பத் நேரில் ஆஜராக முடிய வில்லை என்றும், வருகிற 26-ந் தேதி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
    • பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட சைபர் வலைதள பக்கத்தை ஆய்வு செய்தனர். அப்போது டிவிட்டர் வலைதளத்தில் கடந்த 4-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை விமர்சித்தும் அவரது புகைப்படத்தை பகிர்ந்து மதரீதியாக விமர்சித்தும் அதன் மூலம் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலும் இரு மதத்தினரிடையே பகைமை உணர்ச்சியும் வெறுப்பையும் தூண்டும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்திலும் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.

    இது குறித்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் கட்டிமுத்து என்பவர் இதனை டிவிட்டரில் பதிவிட்டது தெரியவந்தது. அதன்படி கட்டிமுத்து மீது கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்தி பரப்புவோர் மீது காவல் துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமக்குடியில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.

    பரமக்குடி

    மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பரமக்குடியில் சில நாட்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரமக்குடியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். பரமக்குடி நகரத்தலைவர் ரவி வரவேற்று பேசினார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.

    மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணிமாறன், நாகேந்திரன், கணபதி கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் ரஜினி காந்த், சிறுபான்மை பிரிவு மாநில செயாலாளர் அஜ்மல்கான், தொழில் பிரிவு மாநில செயலாளர் காளிஸ்வரன், ஊடகபிரிவு மாநில செயலாளர் ஜெயகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே பெண்ணை அவதூறாக பேசிய கணவர்-கள்ளக்காதலி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கண்மாய்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 27). இவரது கணவர் பிரவீன் (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களாக கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரவின் அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பிரியா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தெரிய வந்ததை தொடர்ந்து ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் கணவர் மீது பிரியா புகார் கொடுத்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்தி ரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் பிரியா தென்காசி ரோட்டில் நடந்து சென்றதாக போது சொக்கர் கோவில் அருகே பிரவீ னும், தங்கப்பி ரியாவும் அவரை வழிமறித்து தகாத வார்த்தை களால் திட்டி அவதூறாக பேசியதாக கூறப்படு கிறது.

    இது குறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் நிலை யத்தில் பிரியா புகார் செய்தா ர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
    • வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக பேசி வருகிறார்.

    கடலூர்:

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், குறிஞ்சிப்பாடி சின்ன காட்டுசாகை சேர்ந்தவர் சங்கர். வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பொது அமைதி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்படி குள்ளஞ்சாவடி போலீசார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலப்பாளையத்தில் குடிபோதையில் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் கனக சபாபதி. இவரது மனைவி தேவகி (வயது51). இவருக்கும் இவரது கொழுந்தன் சிவா (38) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த சிவா, தேவகியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து தேவகி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் குடும்பம் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியுள்ளதாக கூறிய ராகுல் காந்தி மீது ம.பி. முதல் மந்திரியின் மகன் இன்று மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். #ShivrajChouhan #KartikeyaChouhanson #defamationsuit #defamationsuitagainstRahul
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜஹுபா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், அவரது மகன் கார்த்திகேயா சவுகான் மற்றும் குடும்பத்தினருக்கு பனாமா பேப்பர்ஸ் ஊழல், வியாபம் ஊழல் ஆகியவற்றில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டை மறுத்த சிவராஜ் சிங் சவுகான், தவறாத தகவலை வெளியிட்டதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்திருந்தார்.

    இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, பா.ஜ.க.வினர் ஏராளமான ஊழல்களில் ஈடுபட்டு வருவதால் குழப்பத்தில் ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் குடும்பம் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியுள்ளதாக குழப்பத்தில் தெரிவித்து விட்டேன்.

    பனாமா ஊழலில் அவர்களுக்கு தொடர்பு இல்லை. ஆனால், வியாபம் உள்ளிட்ட சில ஊழல்களில் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில், கார்த்திகேயா சவுகான் சார்பில் அவரது வழக்கறிஞர் ஷிரிஷ் ஸ்ரீவஸ்தவா இன்று ராகுல் காந்தி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.  #ShivrajChouhan #KartikeyaChouhanson #defamationsuit #defamationsuitagainstRahul
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது குறித்து வெற்றிவேல் போலீசில் புகார் அளித்தார்.
    ராயபுரம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது. இதுபற்றி அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-

    டி.டி.வி.தினகரன் பற்றி தர்ம ரக்‌ஷன சபாவின் மாநில தலைவரான செல்வம், சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தருவதாகவும், கழிப்பறை கட்டித் தருவதாகவும் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

    இதையடுத்து தர்ம ரக்‌ஷன சபா மாநில தலைவர் செல்வத்தை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.
    ×