என் மலர்

  நீங்கள் தேடியது "adjournment"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.

  திருப்பூர்:

  அனுப்பா்பாளையம் - சோளிபாளையம் சாலைப் பணி தொடங்கப்படவுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

  இது குறித்து 15.வேலம்பாளையம் நகரச்செயலாளா் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலம்பாளையம் நகரப்பகுதியில் அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலும், வேலம்பாளையம் முதல் தண்ணீா்ப்பந்தல் வரையிலும் இதர வாா்டுகளில்உள்ள பல சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு, பல மாதங்களாக குண்டும்குழியுமாகக் கிடக்கின்றன.இதனால், அப்பகுதியில் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அனுப்பா்பாளையம் முதல் சோளிபாளையம் வரையிலான சாலையைசீரமைக்க வலியுறுத்தி ஜூலை 20ந் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் ரூ.87 லட்சத்தில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்று மேயா் தினேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
  • கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  கடலூர்:

  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை எதிர்த்து அண்ணாகிராம ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது தமிழக அரசு கிராமங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்து வதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தினை கொண்டு வந்துள்ளது.

  இந்த திட்டத்தின் பணிகளை பேக்கேஜ் டெண்டர் மூலம் மாவட்ட அளவில் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியில் பெருமளவு நிதி ஊராட்சி மன்றங்களுக்கு சேர வேண்டிய தொகையாகும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் போது அரசே அதிகாரிகள் மூலம் பேக்கேஜ் டெண்டர் விடுவதால் ஊரட்சி மன்றங்களின் உரிமை பறிபோவதாக ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  இந்த திட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே உள்ளனர்.எனவே அரசு வெளியிட்டுள்ள அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அரசாணையை ரத்து செய்ய கோரியும்,ஊராட்சி மன்றங்கள் மூலமாகவே டெண்டர் விட உத்தரவிட கோரியும் கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இந்த வழக்கானது நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்குவந்தது.வழக்கினை விசாரித்த நீதிபதி சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் கடலூர் கலெக்டர்பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை வருகிற 21-ந் தேதிக்கு அன்று தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #FireWorks #SupremeCourt
  புதுடெல்லி:

  தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் விதித்து அனுமதி வழங்கியதுடன், பல்வேறு நிபந்தனைகளுடன் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கியது.  இதையடுத்து பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் சில விளக்கங்கள் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மூல மனுதாரர் தரப்பு வக்கீல், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #FireWorks #SupremeCourt
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #LokSabha
  புதுடெல்லி:

  நாடாளுமன்ற மக்களவை நேற்று காலை கூடியது. அப்போது காங்கிரஸ் எம்பி. மல்லிகார்ஜூன் கார்கே எழுந்து, தனியார் நிறுவனம் பயனடையவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்று பேசினார்.  அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் சில காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

  அதே சமயம் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களும் கோஷமிட்டனர். இரு கட்சியினரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முயன்றார். ஆனால் அமளி தொடர்ந்ததால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

  இதனிடையே மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவைக்கு வந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு, நிதி மந்திரி பியூஷ் கோயல் வாழ்த்து தெரிவித்தார்.  #RafaleDeal #LokSabha #tamilnews 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஜூலை மாதம் 2-வது வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

  புதுச்சேரி:

  புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை 3 நியமன எம்.எல். ஏ.க்களை நியமிக்கும்.

  மத்திய உள்துறை கடந்த ஜூலை மாதம் மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை புதுவை சட்டசபைக்கு நேரடியாக நியமித்தது.

  பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.

  இவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை அதிகாரம் பெற்ற நபரிடம் இருந்து தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்க மறுத்து விட்டார்.

  மத்திய அரசின் நேரடி எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் காங்கிரஸ், தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

  யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் எம்.எல். ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய உள் துறைக்கு உள்ளது என்றும், நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.

  ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி மேல் முறையீடு செய்தார். ஏப்ரல் 6-ந் தேதி மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வந்தது. அப்போது விசாரணையை மே 17-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

  இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

  காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபலும், மத்திய அரசின் சார்பில் வக்கீல் பாலசுப்பிரமணியனும் ஆஜராகினர்.

  மத்திய அரசு தரப்பில் காவிரி வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே. வேணுகோபால் ஆஜராகி உள்ளதால் இந்த வழக்கு விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்குமாறு வக்கீல் பாலசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

  முக்கிய வழக்குகள் பிற்பகலில் விசாரணைக்கு வர இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து ஜூலை 2-வது வாரத்துக்கு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. #GutkaScam
  புதுடெல்லி:

  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், இதற்காக கோடிக்கணக்கான பணம் லஞ்சம் பெற்றதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

  இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 26-ந் தேதி வழங்கிய தீர்ப்பில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

  சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தமிழக அரசு சுகாதாரத்துறை அதிகாரி சிவகுமார் என்பவர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

  இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

  மனுதாரர் சிவகுமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி தனது வாதத்தில் கூறியதாவது:-

  மனுதாரர் எந்தவகையிலும் குற்றவாளி கிடையாது. அவரை விசாரிக்காமலேயே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அந்த உத்தரவு சட்டவிரோதமானது.

  மேலும் ஏற்கனவே தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு எதிராக குட்கா விவகாரத்தை சம்பந்தப்படுத்தி அவருடைய பதவி உயர்வுக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சு, குட்கா விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை குழுவை அமைத்து விசாரணை செய்வதால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

  எனவே, சென்னை ஐகோர்ட்டின் தற்போதைய இந்த தீர்ப்பு டிவிஷன் பெஞ்சு பிறப்பித்த தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது. எனவே, அந்த தீர்ப்பை ரத்து செய்யவேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சன் தனது வாதத்தில் கூறியதாவது:-

  இது ஒரு மாநிலத்தின் அமைச்சர், மூத்த அதிகாரிகள் தொடர்புடைய வழக்கு. இந்த வழக்கில் ஆந்திரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் தொடர்பு உள்ளது. மாநில அரசு அதிகாரிகள் மட்டுமின்றி மத்திய அரசு அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

  வருமான வரித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோப்பே காணவில்லை என்று கூறுகிறார்கள். இதில் கூட்டு சதி உள்ளது.

  இந்த வழக்கின் மனுதாரர் ஒரு சாதாரண அரசு அதிகாரி. ஆனால் அவருடைய வழக்கை வாதாடுவதற்கு முன்னாள் அட்டார்னி ஜெனரலை நியமிப்பதற்கான வசதி அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை எல்லாம் பார்க்கவேண்டும். எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. எனவே, சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்யவேண்டும்.

  இவ்வாறு அவர் வாதாடினார்.

  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  #GutkaScam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை 15-ந் தேதிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. #TTVDinakaran
  புதுடெல்லி:

  தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

  இந்த மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் சார்பில் வக்கீல் மீனாட்சி அரோரா ஆஜராகி வாதாடினார்.  அவர் தன்னுடைய வாதத்தில், ‘இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு தலைமை தேர்தல் கமிஷனில் விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல் செய்த, கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களின் பிரமாண பத்திரங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும், அவற்றில் போலி கையெழுத்து இடப்பட்டுள்ளதாகவும் நாங்கள் புகார் தெரிவித்தோம். மேலும் அந்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் தேர்தல் கமிஷன் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை’ என்று கூறினார்.

  இந்த பிரமாண பத்திரங்கள் குறித்து போதிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய மீனாட்சி அரோரா, தவறான தகவல்களை தெரிந்தே தாக்கல் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று வாதிட்டார்.

  பின்னர் இந்த வழக்கின் விசாரணையை 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
  ×