பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.
பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

பரமக்குடி

மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பரமக்குடியில் சில நாட்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரமக்குடியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். பரமக்குடி நகரத்தலைவர் ரவி வரவேற்று பேசினார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.

மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணிமாறன், நாகேந்திரன், கணபதி கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் ரஜினி காந்த், சிறுபான்மை பிரிவு மாநில செயாலாளர் அஜ்மல்கான், தொழில் பிரிவு மாநில செயலாளர் காளிஸ்வரன், ஊடகபிரிவு மாநில செயலாளர் ஜெயகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com