என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.2.50 லட்சம் மோசடி செய்த தாய்-மகன் மீது வழக்கு
- வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதில் ‘தில்லுமுல்லு’ செய்த தாய்-மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களுர் கிராமத்தை சேர்ந்தவர் நீதிராஜன் (வயது28) இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இதையறிந்த முதுகுளத்தூர் தாலுகா கொளுந்துரையை சேர்ந்த செய்யது ருகானி என்பவர் தனது மகன் மகாதீர் முகம்மது கம்போடியா நாட்டில் நல்ல வேலை செய்து வருவதாகவும், வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக இருப்பதாகவும் தெரிவி த்துள்ளார். இதை நம்பிய நீதிராஜன் தனது மொபைல் நம்பரை கொடுத்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் மகாதீர் முகம்மது தொடர்பு கொண்டு கம்போடியா நாட்டில் நல்ல சம்பளத்தில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். செய்யது ருகானி பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டு, பிசினஸ் விசா மற்றும் டிக்கட் செலவுகளுக்காக பணம் கேட்டதை தொடர்ந்து தாய், மகனிடம் ரூ.2.50 லட்சம் பெற்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் கம்போடியா நாட்டிற்கு டூரிஸ்ட் விசாவில் அனுப்பி வைத்து தெரிவித்த வேலையை வாங்கிக் கொடுக்காமல், சீன கம்பெனியில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து, பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துள்ளார். கம்போடியா அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் சட்ட விரோமாக தங்கியிருந்ததாக கூறி ரூ.2,50 லட்சம் அபராதம் செலுத்தி நாட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தார். ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






