என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவோணம் போலீஸ் நிலையம் முன்பு திரண்ட உறவினர்கள்.
தொழிலாளியை தாக்கியவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு திரண்ட உறவினர்கள்- பரபரப்பு
- ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டது.
- போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
திருவோணம்:
திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி வெட்டி க்காட்டான் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 43).
கூலித் தொழி லாளி. இவருக்கும், புது விடுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில், ரவி சம்பவத்தன்று பீர் பாட்டிலால் வெள்ளை ச்சாமியை குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வெள்ளைச்சாமி அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார்.
வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரவியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் எனக்கூறி வெள்ளைச்சாமியின் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திருவோணம் காவல் நிலையத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்,






