என் மலர்
இந்தியா

நமது நாட்டை பிரிவினை ஆபத்துகளில் இருந்து மீட்க வேண்டும்- கமல்ஹாசன்
- நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன்.
- டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன்.
திமுக கூட்டணி சார்பில் தேர்வான மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் எம்.பி.யாக தமிழில் பதவியேற்றார்.
பதவியேற்றுக் கொண்டு கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
கமல்ஹாசன் எம்.பி பதவியேற்ற நிலையில், எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது-
நமது நாட்டை பிரிவினை ஆபத்துகளில் இருந்து மீட்க வேண்டும்.
எம்.பி என்ற இந்த அத்தியாயத்தை ஒரு முடிவாக அல்ல, ஒரு தொடக்கமாகவே தொடங்குகிறேன்.
அரசமைப்பின் மீதான மரியாதையுடன், ஜனநாயகம் மீதான நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.
நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன்.
அரசியலமைப்பின்படி மனசாட்சியுடன் சேவை செய்வதற்கு ஒரு உறுதியான சபதம் எடுத்துள்ளேன்.
டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன்.
குறுகிய ஆதாயத்திற்காக அல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






