என் மலர்tooltip icon

    இந்தியா

    பழிக்குப் பழியாக சிறுவன் கொலை.. டெல்லியை மிரட்டிய இளம் பெண் தாதா, 7 சிறுவர்கள் கைது
    X

    பழிக்குப் பழியாக சிறுவன் கொலை.. டெல்லியை மிரட்டிய இளம் பெண் தாதா, 7 சிறுவர்கள் கைது

    • ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார்.
    • அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.

    டெல்லியின் சீலம்பூரில் வியாழக்கிழமை மாலை பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் குணால் என்ற 17 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் டெல்லி காவல்துறை, இளம் பெண் தாதா ஜிக்ராவை கைது செய்துள்ளனர்.

    ஜிக்ரா தன்னுடைய உறவினரான சாஹிலுடன் சேர்ந்து, பழி வாங்கும் ஒரு பகுதியாக இந்த கொலையை செய்திருக்கிறார்.

    2023-ம் ஆண்டு நவம்பரில் சாஹிலை மீது கொலை முயற்சி நடந்தது. அதில், அவர் உயிர் தப்பினார். இந்த வழக்கில் லாலா மற்றும் ஷம்பு என 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் குணாலின் நெருங்கிய நண்பர்கள். சிறுவன் என்பதற்காக குணால் பெயர் எப்.ஐ.ஆர். பதிவில் இல்லை. குணாலே திட்டமிட்டு சாஹில்- ஐ கொலை செய்ய முயன்றதாக ஜிக்ரா நினைத்துள்ளார். இதனால் அவர் தற்போது சாஹில் உடன் சேர்ந்து குணாலை கொலை செய்துள்ளார்.

    ஜிக்ரா அந்த பகுதியில் 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்து கொண்டு கும்பலாக இயங்கி வந்திருக்கிறார். ஆயுதங்களுடனும், இந்த சிறுவர்களுடனும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றி வந்திருக்கிறார். அவர்களை வைத்து கொண்டு அந்த பகுதி மக்களை மிரட்டி வந்திருக்கிறார்.

    ஜோயா என்பவருக்கு பவுன்சராகவும் ஜிக்ரா வேலை செய்து வந்திருக்கிறார். ஜோயா தற்போது சிறையில் இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜிக்ரா, சாஹில் மற்றும் தில்ஷாத் ஆகியோருடன் 7 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×