என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அன்னதானப்பட்டியில் தொழிலாளியிடம் நகை பறித்த ரவுடி கைது
- அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த ஒருவர், பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.2150 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு, தர்மலிங்கம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் தனது வேலை விஷயமாக அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.2150 பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட , மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ரவுடி மாதேஸ் என்கிற மாதேஸ்வரன் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து செயின், பணம் உள்ளிட்டவை மீட்கப்பட்டது.
அவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.






