என் மலர்
இந்தியா

மது கொடுத்தால் தான் கீழே இறங்குவேன்... திருப்பதி கோவில் கோபுரத்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட நபர்
- 'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என அந்த நபர் முரண்டு பிடித்தார்
- இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தங்க கலசத்தை சேதப்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
'மது வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவேன்' என முரண்டு பிடித்து அந்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
குடிபோதையில் இருந்த நபரை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பதி போலீஸ் கைது செய்து அழைத்துச் சென்றது.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் வசிக்கும் குட்டாடி திருப்பதி என தெரியவந்தது.
Next Story






