என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருப்பதி கோவிலில் நடிகர் தனுஷ் மகன்களுடன் சாமி தரிசனம்
    X

    திருப்பதி கோவிலில் நடிகர் தனுஷ் மகன்களுடன் சாமி தரிசனம்

    • சுப்ரபாத சேவையில் அவர் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
    • தரிசனம் முடிந்து தனுஷ் கோவிலில் இருந்து வெளியே வந்த போது அவரை காண பக்தர்கள் முண்டியடித்தனர்.

    நடிகர் தனுஷ் அவரது மகன்களுடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்தார். இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். சுப்ரபாத சேவையில் அவர் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    தரிசனம் முடிந்து தனுஷ் கோவிலில் இருந்து வெளியே வந்த போது அவரை காண பக்தர்கள் முண்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. மேலும் சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். தனது மகன்களுடன் வந்த தனுஷ் அங்கிருந்தவர்களை பார்த்து கைகூப்பி வணங்கியபடி சென்றார்.

    Next Story
    ×