என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு.
திருக்காட்டுப்பள்ளி கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்
- சவுந்தரநாயகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் அமரவைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கோட்டை காளியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் சமேத அக்னி ஸ்வர சுவாமி கோவிலில் நவராத்திரி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.
சவுந்தரநாயகி அம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சலில் அமர வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நவராத்திரி விழா தொடக்கமாக கொலுபொ ம்மைகள் வைக்கப்பட்டு கொலுகாட்சி நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி அய்யர் கல்வி நிறுவன செயலர் வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா தொடங்கியது.
திருக்காட்டுப்பள்ளியில் கோட்டை காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு கோட்டை காளிய ம்மன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திரளான பக்தர்கள் கோட்டை காளியம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story






