search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புற்றடி மாரியம்மன் கோவிலில் மகாசண்டியாகம்
    X

    மகாசண்டியாகம் நடந்தது.

    புற்றடி மாரியம்மன் கோவிலில் மகாசண்டியாகம்

    யாகத்தில் 108 வகையான மூலிகை, வேதிகை பொருட்கள், பட்டு புடவை, தங்கதாலி, வெள்ளி கொலுசு ஆகியவை இட்டு பூர்ணாஹூதி,தீபாராதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புற்றடிமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த கடந்த ஏப்ரல் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினம் தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது.இந்நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

    இதனையொட்டி உலக தேச நலன் பெற வேண்டி அம்மனுக்கு சர்வ மங்கள மகா சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் 108வகையான மூலிகை, வேதிகை பொருட்கள், பட்டுபுடவை, தங்கதாலி, வெள்ளிகொலுசுஆகியவை இட்டு பூர்ணாஹூதி,தீபாரா தனை நடை பெற்றது. முன்னதாக கோபூஜை, கஜபூஜைகள் செய்யப்ப ட்டது. மகாதீபா ராதனை கட்டப்பட்டது.பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்க ப்பட்ட 108 கலசங்களைக் கொண்டு அம்மனுக்கு கலச அபிஷேகம் நடைபெ ணற்றது.பூஜைகளை வைத்தீஸ்வரன்கோயில் ராஜாமகாதேவ சிவாச்சா ரியார் தலைமை யில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர்.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×