என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருபூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
    X

    ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    குருபூஜை விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

    • பஞ்சபூத மகாயாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மங்கள பொருட்களுடன், பிரசாதம் வழங்கப்பட்டது.

    சீர்காழி:-

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் மறைந்த நாடி.ராஜேந்திரா சுவாமிகள் நிர்மானித்த ஒளிலாயம் அமைந்துள்ளது.

    இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

    27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், பசுக்களை பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

    இங்கு அமைந்துள்ள சத்குரு ஒளிலாயம் பீடத்தில் நிறுவனர் சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 5-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    உலக நன்மை வேண்டி நிலத்திற்கு அதிபதியான தியாகேசர், நீருக்கு அதிபதியான ஜம்பு கேஸ்வரர், அக்னிக்கு அதிபதியான அருணாச்சலேஸ்வரர், வாய்வுக்கு அதிபதியான காளகஸ்தீஸ்வரர், ஆகாயத்திற்கு அதிபதியான சிதம்பரேஸ்வரர் சுவாமிகள் அம்பாளுடன் எழுந்தருள செய்து, அவர்களுக்கு முன்பாக ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பஞ்சபூத மகா யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி திபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுமார் 1500பெண்களுக்கு சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று சேலைகளை வழங்கினார்.

    அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ ம.சக்தி, பேரூர் செயலாளர் போகர்.ரவி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருட்களுடன், நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது.

    குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை ஒளிலாயம் பீடத்தின் நிர்வாகிகள் நாடி.செல்வமுத்துகுமரன், நாடி.செந்தமிழன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் மற்றும் கிராமமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×