என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடன்குடி"
- பஜாரில் உள்ள பேக்கிரி கடை முன்பு உள்ள டீ கடை முன்பு வழக்கமாக பரபரப்பாக இருந்துள்ளது.
- பேக்கரி கடை முன்பக்க கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் சேதமடைந்துள்ளது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சி பஜார் எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய பகுதியாகும்.
திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் சாலையில் உள்ள இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்கு வரத்து அதிகமாக இருக்கும்.
சம்பவத்தன்று இந்த பஜாரில் உள்ள பேக்கிரி கடை முன்பு உள்ள டீ கடை முன்பு வழக்கமாக பரபரப்பாக இருந்துள்ளது.
அப்போது திருச்செந்தூரில் இருந்து வந்த ஆட்டோ ஒன்று கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி பேக்கரிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோ டிரைவர் வாகனத்தை ஓட்டி வரும்பொழுது திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கடையில் நின்று கொண்டிருந்த 3 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
மேலும் பேக்கரி கடை முன்பக்க கண்ணாடிகளை உடைத்து பொருட்கள் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் கடை முன் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்து ஆட்டோ மோதும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர்.
- ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து படிப்படியாக குறைந்து சுமார் 2 மாதங்களில் ஒரு கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
உடன்குடி,:
உடன்குடி வட்டார பகுதி என்பது 17 கிராம ஊராட்சியும், ஒரு பேரூராட்சியும் அடங்கிய பகுதியாகும். மெஞ்ஞான புரம், பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், குலசே கரன்பட்டினம், மணப்பாடு, செட்டியாபத்து, தண்டுபத்து போன்ற பெரும் ஊரை அடக்கிய பகுதியாகும்.
இங்கு பல்வேறு விவசாயம் முன்பு நடந்தது. தற்போது பனை, தென்னை, முருங்கை ஆகிய 3 விவசாயம் மட்டுமே மும்முரமாக நடந்து வருகிறது.
குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர். திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் மும்முரமாக நடந்தது.
முருங்கையும் கொத்து கொத்தாக காய்க்கிறது. ஒரு கிலோ ரூ.30-ல் இருந்து படிப்படியாக குறைந்து சுமார் 2 மாதங்களில் ஒரு கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இருந்தாலும் விவசாயிகள் தவறாமல் முருங்கைக்காய் பறித்து கொண்டு வந்து கமிஷன் கடையில் குவித்தனர்.
தற்போது மேலும் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்கின்ற னர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை என்று கொண்டு குவிப்பதால், வியாபாரிகள் இதை வாங்கி, மதுரை, திருச்சி, விருதுநகர், சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
உற்பத்தி செலவு கூட கட்டுபடியாகவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். முருங்கைகாயை பார்சல் போடுவது, ஏற்று கூலி, வாகனங்களில் கொண்டு செல்வது, இறக்கு கூலி, விற்பனை கமிஷன் என கணக்கு போட்டு வெளியூர்களில் விற்பனை செய்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
- வாகனம் காத்த விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
- நாளை பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் முத்தாரம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆவணி திருவிழாவையொட்டி நேற்று காலை 7 மணிக்கு குலசை முத்தாரம்மன் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வாகனம் காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து பின்பு அங்கு இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்றனர். அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் செய்தனர். மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் அம்பாள் மஞ்சள் நீராடுதல் நையாண்டி மேளத்துடன் அம்பாள் வீதியுலா வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு படை கஞ்சி வார்த்தல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று (புதன்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு சிறப்பு பூஜை நடைபெறும்.
விழாவையொட்டி வில்லிசை, கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (31-ந்தேதி) பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
- உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சாத்தான்குளம், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
உடன்குடி:
திருச்செந்தூர் மின்விநியோக பொறியாளர் விஜயசங்கர பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உடன்குடி, சாத்தான்குளம் பகுதி யில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, பழனியப்பபுரம், உடன்குடி, சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்பு ராயபுரம், தருமபுரி, போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம், நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, செம்பூர், மணல்குண்டு, ஆதிசாதபுரம், வேலன்காலனி, மளவராய நத்தம், மெஞ்ஞானபுரம், அனைத்தலை ஆகிய பகுதியில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
அதேபோல் ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக் குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக் கோட்டை, புத்தன்தருவை, மணிநகர் படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன் குடியிருப்பு, பிச்சி விளை, அழகப்பபுரம், பழனியப்ப புரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசீர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார் குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடி யிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.
- தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட பரமன்குறிச்சி, மெஞ்ஞான புரம், செட்டியாபத்து, தண்டுபத்து, சீர்காட்சி, வெள்ளாளன்விளை, லட்சுமிபுரம், நங்கைமொழி உட்பட 18 ஊராட்சி மன்ற பகுதிகளிலும், அதுவும் செம்மணல் மற்றும் வண்டல் மண் நிறைந்தபகுதிகளில் முருங்கை மற்றும் தென்னை பயிரிடுவதில் விவசாயிகள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர். வேளாண்மை துறையில் பதிவு செய்து அரசு சலுகைகள் பெற்று, மானியத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் நடக்கிறது.
தற்போது கமிஷன் கடைகளில் ஒரு கிலோ எடையுள்ள முருங்கைக்காய் ரூ.25 முதல் 28 வரையிலும், தேங்காய் ஒரு கிலோ ரூ.26-க்கும் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிக அக்கறை எடுத்து தீவிரமாக பயிரிட்டு வருகின்றனர்.
- பஜார் பகுதியில் பயணத்திற்கு பயன்படாத பழுதான ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.
- கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடன்குடி:
உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் சங்க கமிட்டி தலைவர் ரவி தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் வேல்ராஜன், துணை செயலாளர் ராஜா, பிரதீப் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சுந்தர்சிங் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பில், வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள போலீஸ் பூத் அலுவலகத்தை உடனடியாக அப்புறப்படுத்தி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும், உடன்குடி பஜார் வீதிகளில் அலையும் மாடுகள் மற்றும் பன்றிகளை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும், பஜார் பகுதியில் பயணத்திற்கு பயன்படாத பழுதான ரோட்டை புதுப்பிக்க வேண்டும். இக் கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போரா ட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அமுதன் ஆண்ட்ரூஸ் நன்றி கூறினார்.
- நாளை காலை பால்குடம் எடுத்து பவனிவருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- 3-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை கொடைவிழா வருடம் தோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த வருட திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வருசாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு புஷ்பாஞ்சலி, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட்டடது. இரவு 7 மணிக்கு உடன்குடி வட்டாரப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, வறட்சி நீங்கி பசுமை வேண்டி பெண்கள் பாடல்கள் பாடி வழிபாடு செய்யும் திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு இளையபெருமாள் பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.
நாளை மே (1-ந்தேதி) காலை 8 மணிக்கு மேளதாளம், வாண வேடிக்கையுடன் பால்குடம் எடுத்துபவனி வருதல், நண்பகல் 12 மணிக்கு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபராதனையுடன் உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி இரவு 7 மணிக்கு வில்லிசை, நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் வீதிஉலா வருதல், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சந்தன மாரியம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குதல் நடக்கிறது.
3-ந் தேதி (புதன்கிழமை) நண்பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் சப்பரத்தில் பவனிவருதல், 4-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்குதல், இரவு 8 மணிக்கு கேரளா புகழ் கலக்கல் கண்ணன் குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.
5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சங்கடக்கார சுவாமி கோவிலில் காலை 8 மணிக்கு வருசாபி ஷேகம், பகல் 12 மணிக்கு அலங்காரம் தீபாராதனை, இரவு 12 மணிக்கு சிறப்பு படையல் பூஜை, மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- விழாவுக்கு உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
உடன்குடி:
உடன்குடி யூனியன் குதிரைமொழி ஊராட்சி சோலை குடியிருப்பில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சாமிநாதன், உடன்குடி யூனியன் ஆணையாளர் பழனிசாமி, ஊராட்சி தலைவர் சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மீன்வளம். மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி தலைவரும், உடன்குடி நகர தி.மு.க. செயலாளருமான சந்தையடி மால்ராஜேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் மனப்பாடு ஜெயபிரகாஷ், மெஞ்ஞானபுரம் ராஜபிரபு, முபாரக், ஒன்றிய பொருளாளர் விஜயன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் மோகன், குதிரைமொழி ஊராட்சி செயலாளர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொடக்க விழாவிற்கு மால் ராஜேஷ் தலைமை வகித்தார்.
- மெஞ்ஞானபுரம் பஜாரில் இலவச நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
உடன்குடி:
முதல்-அமைச்சரும், தி.மு.க., தலைவருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் நீர், மோர் பந்தல் அமைக்க வேண்டும் என அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் உடன்குடி பேரூர் தி.மு.க., செயலாளரும், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவருமான மால் ராஜேஷ் ஏற்பாட்டில் உடன்குடி மெயின் பஜாரில் நீர், மோர் பந்தல் தொடக்க விழாவிற்கு மால் ராஜேஷ் தலைமை வகித்தார்.
பேரூராட்சி கவுன் சிலர்கள் ஜாண்பாஸ்கர், சரஸ்வதி பங்காளன், பஷீர், பிரதீப் கண்ணன், ஆபீத், மும்தாஜ், சபனா, அன்பு ராணி ஆகியோர் முன்னி லை வகித்தனர். நீர், மோர் பந்தலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் வழங்கினார்.
இதில் மூக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா ச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாநில மகளிர் பிரச்சார குழு செயலாளர் ஜெஸி பொன் ராணி, உடன்குடி பேரூர் வார்டு செயலாளர்கள் அன்வர் சலீம், சித்திரை செல்வன், சலீம், பஷீர், முருகேசன், பாலசிங், ஆனந்த், ஆட்டோ கணேசன், சாம்நேஸ், ராஜேந்திரன், முத்துப் பாண்டி, கணேஷ், நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் ஹீபர் மோசஸ் ஸ்மைல்சன், முபாரக் மற்றும் பேரூர் நிர்வாகிகள் அப்துல் ரசாக், தங்கம், திரவியம், மேகநாதன், பிரவீனா, ஹரி, ராஜ்குமார், இஸ்மாயில் இசக்கிமுத்து, கணேசன், நிர்மல்சிங், இசக்கிப்பாண்டி, ஸ்டெல்லா, செண்பகவள்ளி, கிளாட்வின், பைசுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மெஞ்ஞானபுரம்
உடன்குடி மேற்கு ஒன்றியம் மெஞ்ஞானபுரம் பஜாரில் கோடைகால இலவச நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இலவச நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழரசம், நீர், மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெசி பொன்ராணி, மாவட்ட பிரதிநிதிராஜா பிரபு, கிளை செயலாளர்கள் ஜெரால்டு, ஜெயக்குமார், சுடலைக்கண், மாணவர் அணி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் செய்திருந்தார்.
- பள்ளி நிர்வாகி ராதா ஆனந்தகுமார் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
- சுபா கல்யாண் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பண்டார சிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளி நிர்வாகியும், செயலருமான ராதா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்விக்குழு தலைவர் சுப்பையா, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் முருகேஸ்வரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவி சொர்ணப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுபா கல்யாண் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக உடன்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, குலசேகரன்ப ட்டினம் ஊராட்சி துணைத்தலைவர் வக்கீல் கணேசன், புனித அன்னாள் பள்ளி, இந்து அருள்நெறிப் பள்ளி ஆகியவற்றின் தலைமையாசிரியர்கள் தேவ ஈருதய ஆல்பர்ட், சண்முகக்குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஜாஸ்பர் இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பல்வேறு கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- கணவரால் கைவிடப்பட்ட நிலையில் சத்யபாமா இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
- கிராம சபை கூட்டத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி சத்யபாமா, கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
உடன்குடி:
உடன்குடி ஊராட்சி ஒன்றியம், நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யபாமா. இவர் தனது கணவரால் கைவிடப்பட்ட நிலையில் இரு குழந்தை களுடன் தனியாக வசித்து வருகிறார்.
சத்யபாமா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகன் 5-ம் வகுப்பும், மகள் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நயினார்பத்து கிராம ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தலைமையில் கடந்த
22-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சத்யபாமா, தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அதில் குழந்தைகள் படிப்பதற்கு மின்சாரம் இல்லை என்று கோரிக்கை வைத்தார்.
மாவட்ட கலெக்டர் வைப்புத்தொகை செலுத்தி சத்யபாமாவின் வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.
மேலும், அவர் குடி யிருக்கும் இடத்திற்கு பட்டா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் இலவச வீடு கட்டுவதற்கான நடவடிக்கை யினையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து சத்யபாமா வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சத்யபாமா கூறியதாவது:-
பல ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை. எனவே கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தேன். ஒரு சில நாளில் எனது வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா ஆகியவை வழங்கப்பட்டது.
மனு அளித்த ஒரு சிலநாளில் நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மின்சார வெளிச்சத்தில் எனது பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள் என்று கூறினார்.
- விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- சுடலைமாடனின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய சுடலை மாடனிடம் அவரது பதவி உயர்வு, சாதி குறித்து பேரூராட்சியின் முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் அவதூறாக பேசினார்கள்.
இதையடுத்து கடந்த 17-ந்தேதி விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 23-ந்தேதி உயிரிழந்தார்.
சுடலைமாடனின் சாவுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் என இவரது உறவினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தநிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப் பட்டது.
சுடலைமாடன் குடும்பத் திற்கு ரூ.12 லட்சம் அரசு உதவி, அவரது மகளுக்கு அரசு வேலை, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதனால் சுடலை மாடன் உடலை வாங்கி உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் சுடலை மாடன் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தமிழக தூய்மை பணியாளர் இணைய துணைத்தலைவர் கோவிந்த ராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கினார்.திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமி நாதன், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ் பேகம், அன்புராணி, ஆபித், பிரதீப் கண்ணன், பஷீர், சரஸ்வதி பங்காளன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மீராசி ராசூதீன், மகாவிஷ்ணு, ரவிராஜா, முன்னாள் கவுன்சிலர் முகமது சலீம், மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், ஓன்றிய செயலர்கள் ரமேஷ், நவீன்குமார், சதீஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்