search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடியில் இருந்து  தினமும் கோவை, ஈரோடு சென்ற அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை
    X

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு கொடுத்த தி.மு.க.வினர்.

    உடன்குடியில் இருந்து தினமும் கோவை, ஈரோடு சென்ற அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை

    • உடன்குடியில் இருந்து ஈரோடுக்கும் பல வருடங்களாக அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டது.
    • கோவை, ஈரோட்டிற்கு மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    உடன்குடி:

    உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை நேரில் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் தொழில் நிமித்தமாக அடிக்கடி கோவை, ஈரோடு சென்று வருவார்கள்.

    எனவே பொது மக்களின் வசதிக்காக உடன்குடியில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை வழியாக கோவைக்கு தினசரி மாலை 5.20 மணிக்கு அரசு விரைவு பஸ் தடம் எண் 632 இயக்கப்பட்டது. இதேபோல் மாலை 5.15 மணிக்கு உடன்குடியில் இருந்து ஈரோடுக்கும் கடந்த பல வருடங்களாக அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்து வந்தனர். கடந்த கொரோனா பரவல் தடுப்பு காரணமாக இந்த 2 அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் அந்த பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளா கின்றனர். எனவே கோவை, ஈரோடு ஆகிய பகுதிக்கு மீண்டும் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப் அலி, மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகமது, ஒன்றிய பொருளாளர் பாலகணேசன் உட்பட தி.மு.க.வினர் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×