search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழா-  பனை ஓலை சேகரிப்பு தீவிரம்
    X

    பனை ஓலை சேகரிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள்.

    நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழா- பனை ஓலை சேகரிப்பு தீவிரம்

    • கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கோவில்கள் முன்பு சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
    • செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் முழு பனைமரத்தை வைத்து சொக்கப்பனை உருவாக்குவார்கள்.

    உடன்குடி:

    கார்த்திகை தீப திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்துவார்கள். வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சுவாமிக்கு படையல் போட்டு வழிபடுவது வழக்கம்.

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் முழு பனைமரத்தை வைத்து சொக்கப்பனை உருவாக்குவார்கள். சில இடங்களில் பப்பாளி மரமும், சில இடங்களில் வாழை மரமும், இவைகள் கிடைக்காத இடங்களில் உயரமான கம்புகளில் குறுக்காக கம்புகளைகட்டி சுற்றி பனைமர ஒலைகளை கட்டி கோவிலுக்கு முன்பு வைத்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். இதற்காக முன்னதாக பனைஓலை சேகரிப்புபணியில் வாலிபர்கள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×