என் மலர்
நீங்கள் தேடியது "மரம் நடும் விழா"
- தமிழ்நாட்டில் மட்டும் ‘ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)’ மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
- மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்.
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம், கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் 'ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)' மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் துவக்க விழா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று (05-06-2025) ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதனுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் நடப்பட்டன.
இது தொடர்பாக சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முறையான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் வளம் இழந்த நிலத்தை மீண்டும் வளமாக்க முடியும் என்பதை காவேரி கூக்குரல் இயக்கம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இவ்வியக்கம் மூலம், கடந்த நிதி ஆண்டில் (2024 – 25) 34,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் 1.36 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஆண்டு இந்த சுற்றுச்சூழல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் (2025 - 2026) தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் எத்திராஜலு கூறுகையில், "UNFCCC இன் COP29 மற்றும் UNCCD இன் COP16 உச்சி மாநாடுகளில் நாங்கள் முன்நிறுத்திய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, உலகளாவிய காலநிலை நிதியில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே விவசாயம் மற்றும் உணவு அமைப்புகளை அடைகிறது என்பதாகும்.
காலநிலை மாற்றத்தை வளிமண்டலத்தில் சரிசெய்ய முடியாது. அதை மண்ணில் மட்டுமே சரிசெய்ய முடியும். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண் புத்துயிர் பெறுவதற்கு அதிக கவனமும் முதலீடும் அவசியம், இது தான் உடனடியாக செய்யப்பட வேண்டியது. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்" எனக் கூறினார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. அதனுடன் கூடுதலாக பேரூர் ஆதீனத்துடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரச மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" என்ற திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரம் நடும் விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். "ஒரு கிராமம் ஒரு அரச மரம்" திட்டத்தின் மூலம் நடவு செய்த அரச மரக்கன்றுகள், அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த தன்னார்வலர் குழுக்களால் பராமரிக்கப்பட உள்ளன.
காவேரி கூக்குரல் இயக்கம் 2024 ஆம் ஆண்டில், மரம் சார்ந்த விவசாயம் குறித்த மாநில அளவில் 2 பெரிய பயிற்சி நிகழ்ச்சிகளையும், மண்டல அளவில் 6 நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இதில் 8,721 விவசாயிகள் பங்கேற்றனர்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR), தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM), மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (CTCRI) போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் மரம் சார்ந்த விவசாயம் குறித்து நுட்பங்களை விவசாயிகளுடன் பகிர்ந்தனர்.
இவ்வியக்கம் மூலம் 2024 ஆம் ஆண்டில், உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5), வன மகோற்சவ வாரம் (ஜூலை 1-7), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மற்றும் உலக மண் தினம் (டிசம்பர் 5) போன்ற முக்கிய நாட்களில், 506 மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மொத்தம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஈஷா நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன. இதற்காக கடலூரில் 85 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும், திருவண்ணாமலையில் 15 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும் இவ்வியக்கம் மூலம் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் தமிழ்நாட்டில் 40 விநியோக நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
- தேசிய பசுமை உலக மண்வள நாளை முன்னிட்டு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மரம் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
- விழாவில் மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
தேசிய பசுமை உலக மண்வள நாளை முன்னிட்டு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மரம் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமை தாங்கினார்.
சமூக சேவகரும் தனியார் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளருமான கலில் ரகுமான் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மண் வளம் பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி கூறியும் மரக்கன்றுகளை வழங்கி அதனை நடவும் செய்தார்கள். மேலும் உலக மண் வள நாளை முன்னிட்டு திருமுருகன் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் சுதா மோகன் அரசு பள்ளி மாணவர்களோடு கொண்டாட எண்ணி 100 மரக்கன்றுகளை உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும் நலிவடைந்த மாணவர்களுக்கு எழுது பொருட்களை சமூக சேவகர் ராஜா வழங்கினார். மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, மாதுளம், வெற்றிலை, பிச்சி உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கினர். விழாவில் ஆனந்தா, பாலகணேசன், ஜெய்நாத், தனியார்அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் செல்வி, யமுனா, பராசக்தி, வெர்ஜின், பிருந்தா, முத்து செல்வி மற்றும் பள்ளியின் தேசிய பசுமை படை மாணவர்கள் செய்திருந்தனர்.
- நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
- பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்று களை நட்டு வைத்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேரன், துணைத் தலை வர் அன்பழகன், செயல் அலுவலர் பாலசுப்பி ரமணியன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன், குடிநீர் திட்ட பணியாளர் முத்து, ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கருணாகரன் பன்னீர்செல்வம், செயலா
ளர் ராமலிங்கம், பொருளா ளர் தனபால், என்ஜினீயர் சுரேந்திரன், பி.கே.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்று களை நட்டு வைத்தனர்.
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு இணைந்து மரம் நடும் விழா நடைபெற்றது.
- நெடுஞ்சாலை ஓரத்தில் விடுபட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக டோல்கேட் முதல் பாளையம் வரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.
தருமபுரி,
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்திய அரசு பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி வருகிறது. அதில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு இணைந்து மரம் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திட்டத் தலைவர் நரேஷ் (கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு), தொழில்நுட்ப மேலாளர் திலீப் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம்), மற்றும் குழு தலைவர் உப்பம் கன்சல்டன்சி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 500 மரங்கள் இலக்காக கொண்டு தொப்பூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விடுபட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக டோல்கேட் முதல் பாளையம் வரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.
இதில் பாளையம் டோல் பிளாசா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
- சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பாறைப்பட்டி, சுக்கிரவார்பட்டி கிராமங்களில் நடந்தது. கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணாஅசோக் ஆகியோர் வழிநடத்தினர். முதல்வர் சுதாபெரியதாய் தலைமை தாங்கினார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், பாறைப்பட்டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சோலைசாமி, ராமசாமி, போத்திராஜ் ஆகியோர் மரம் நட்டனர். மாணவி அகிலாண்டேஸ்வரி சுதந்திரம் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
- அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் தத்தெடுத்த கிராமங்களுள் ஒன்றான மைக்குடி கிராமத்தில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதலுடன் மரம் நடுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.
மைக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாண்டி யம்மாள் மற்றும் மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி தலைமை யாசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட பசுமலை வனச்சரகர் கிரிதரன் மற்றும் வனக்காவலர் உமையவேல் ஆகியோர் 300 மரக்கன்றுகளை வழங்கினர்.
இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.
- தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன.
- பருவ மழைக் காலங்களில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறது.
வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைப்பெற்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன.
மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் தேசிய அளவில் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் 'வன மகோத்சவம்' விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடும் விழாக்கள் மூலம் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 86 இடங்களில், 472 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் மொத்தம் 1,52,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
காவேரி கூக்குரல் இயக்கம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் அது சார்ந்த வேளாண் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதன் மூலம் 1,72,600 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி உள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் பெருமளவு மரக்கன்றுகளை நடுவதால் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுகிறது.
இது சுற்றுச்சூழல் சார்ந்த பலன்களோடு விவசாயிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதாரப் பலன்களையும் தருகிறது.
மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் பொருளாதார பலன்களை பெறுவதற்காக இவ்வியக்கம் சார்பில் மரப்பயிர் சாகுபடி, சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி, உணவுக்காடு வளர்ப்பு, வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளை மாநில அளவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் உள்ளூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகிறது.
இவ்வியக்கம் பருவ மழைக் காலங்களில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறது. அதனுடன் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டின் சில முக்கிய நாட்களில் மரம் நடும் விழாக்களை பெரிய அளவில் நடத்துகிறது. அந்த வகையில் வன மகோத்சவத்தின் போது மட்டுமின்றி உலக சுற்றுச்சூழல் தினம், காந்தி ஜெயந்தி, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி போன்ற சூழலியல் முன்னோடிகளின் நினைவு நாட்களிலும் மாபெரும் மரம் நடு திருவிழாக்களை நடத்துகிறது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலமாக இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விலை மதிப்பு மிக்க மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு 3 ரூபாய் மானிய விலையில் வழங்குகிறது. மேலும் இப்பண்ணைகளில் மரக்கன்றுகள் வாங்கவும், இவ்வியக்கம் குறித்த கூடுதல் தகவல்களுக்கும் 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.






