ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா

ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா
Published on

சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பாறைப்பட்டி, சுக்கிரவார்பட்டி கிராமங்களில் நடந்தது. கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணாஅசோக் ஆகியோர் வழிநடத்தினர். முதல்வர் சுதாபெரியதாய் தலைமை தாங்கினார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், பாறைப்பட்டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சோலைசாமி, ராமசாமி, போத்திராஜ் ஆகியோர் மரம் நட்டனர். மாணவி அகிலாண்டேஸ்வரி சுதந்திரம் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com