என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TREE PLANTING CEREMONY"

    • நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
    • பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்று களை நட்டு வைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேரன், துணைத் தலை வர் அன்பழகன், செயல் அலுவலர் பாலசுப்பி ரமணியன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன், குடிநீர் திட்ட பணியாளர் முத்து, ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கருணாகரன் பன்னீர்செல்வம், செயலா

    ளர் ராமலிங்கம், பொருளா ளர் தனபால், என்ஜினீயர் சுரேந்திரன், பி.கே.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்று களை நட்டு வைத்தனர்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
    • சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பாறைப்பட்டி, சுக்கிரவார்பட்டி கிராமங்களில் நடந்தது. கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணாஅசோக் ஆகியோர் வழிநடத்தினர். முதல்வர் சுதாபெரியதாய் தலைமை தாங்கினார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், பாறைப்பட்டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சோலைசாமி, ராமசாமி, போத்திராஜ் ஆகியோர் மரம் நட்டனர். மாணவி அகிலாண்டேஸ்வரி சுதந்திரம் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் தத்தெடுத்த கிராமங்களுள் ஒன்றான மைக்குடி கிராமத்தில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதலுடன் மரம் நடுவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.

    மைக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாண்டி யம்மாள் மற்றும் மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி தலைமை யாசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட பசுமலை வனச்சரகர் கிரிதரன் மற்றும் வனக்காவலர் உமையவேல் ஆகியோர் 300 மரக்கன்றுகளை வழங்கினர்.

    இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.

    • தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு வார விழா நடந்தது.
    • விழாவில் உறுதிமொழி எடுத்தல் மரம் நடுதல் விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    70- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    கூட்டுறவு வார விழாவின் முதல் நாள் நிகழ்வாக கூட்டுறவு கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல் மற்றும் மரம் நடுதல் விழா தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர், வார விழா குழு தலைவர்பழனீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் வார விழா குழு துணை தலைவருமான பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் அப்துல்மஜீத், பொது விநியோகத் திட்ட துணைப்ப திவாளர் கருப்பையா, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள்சந்தான லட்சுமி, அன்புச்செ ல்வன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சிய ர்பன்னீர்செல்வம், மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர்கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • உள்ளாட்சி பிரநிதிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

    புதுக்கோட்டை:

    சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொன்னமராவதி பேரூராட்சியின் சார்பாக 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இந் நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் மற்றும் பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அடக்கி பழனியப்பன், சாத்தையா நாகராஜ், ராஜா, மருத்துவர் நடராஜன், பேரூராட்சி சுய உதவி குழு , மஸ்தூர் பணியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


    ×