தஞ்சையில்70-வது கூட்டுறவு வாரவிழா கொண்டாட்டம்

தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு வார விழா நடந்தது. விழாவில் உறுதிமொழி எடுத்தல் மரம் நடுதல் விழா நடைபெற்றது.
கூட்டுறவு வாரவிழாவில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூட்டுறவு வாரவிழாவில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

70- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

கூட்டுறவு வார விழாவின் முதல் நாள் நிகழ்வாக கூட்டுறவு கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல் மற்றும் மரம் நடுதல் விழா தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர், வார விழா குழு தலைவர்பழனீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் வார விழா குழு துணை தலைவருமான பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் அப்துல்மஜீத், பொது விநியோகத் திட்ட துணைப்ப திவாளர் கருப்பையா, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள்சந்தான லட்சுமி, அன்புச்செ ல்வன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சிய ர்பன்னீர்செல்வம், மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர்கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com