என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு - பக்தர்கள் குவிந்தனர்
    X

     அவினாசி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தரிசனம் செய்த பக்தர்கள். 

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு - பக்தர்கள் குவிந்தனர்

    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

    திருப்பூர்:

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமி சிறப்பு அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் அவினாசி, தெக்கலூர், ஆட்டையாம்பாளையம், சேவூர், புதுப்பாளையம், கணியாம்பூண்டி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் கங்காதீசுவரர், மாரியம்மன் கோவில், அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்றது. நவநீதகிருஷ்ணன் ஸ்ரீ பூமா நீளாச்சமேத சீனிவாச பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம், நலுங்கு பொடி, நெய் அபிஷேகங்கள் நடைபெற்றது. உடுமலை குட்டை திடலில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பிரசன்ன விநாயகர் கோவிலில் அதிகாலை பல்வேறு திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருமூர்த்திமலை பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினமான இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    பஞ்சலிங்கம் அருவி, பாலாற்றில் நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். அதே போல் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதேப்ேபால் திருப்பூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், சுக்ரீஸ்வரர் ஆலயம், கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர், முருகன், அம்மன் ஆலயங்களிலும் , ஊத்துக்குளி தென் திருப்பதி கோவில் மற்றும் சாய்பாபா கோவில் ஆகியவற்றில் மக்கள் காலை முதலே வந்து சாமி தரிசனம் செய்தனர். காங்கயம் சிவன்மலை கோவிலிலும் பக்தர்கள் குவிந்தனர்.

    Next Story
    ×