search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PRADOSHA WORSHIP"

    • பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்.
    • இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் வருகிற 22-ந்தேதி பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அன்று மாலை 4.30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    24-ந்தேதி பங்குனி மாத பவுர்ணமி அன்று விடுமுறை நாளாக இருப்பதால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதோடு பங்குனி மாத பவுர்ணமி முன்னிட்டு சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் செலுத்த உள்ளனர். வருகிற 25-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்ப்பதோடு, ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது, இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் அறிவித் துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திரளுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மகாசிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 8-ந் தேதி சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 21 வகையான அபிஷே கங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று இரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     விடுமுறை தினம், சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் சதுரகிரியில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பஸ் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சதுரகிரிக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

    மலையேறு பவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுபாடுகளை வனத்துறை விதித்துள்ளது. சதுரகிரியில் மகா சிவராத்திரி, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தை, ஆடி மாத அமாவாசை, சிவராத்திரி தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகிற 9-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று (7-ந் தேதி) அதிகாலையிலேயே மலையேற அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    காலை 6.40 மணிக்கு வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்றனர்.

    மலைப்பாதையில் உள்ள சங்கிலி ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடி காணிக்கை செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்தக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • சிவபெருமானையும், நந்திபகவானையும் வழிபட விசேஷமான நாள்.
    • நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும்.

    பிரதோஷ நாள் சிவபெருமானையும் நந்தி பகவானையும் வழிபட விசேஷமான நாள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் மாலை நந்தி பகவானுக்கும் சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும். மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடக்கக்கூடிய இந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்வதன் மூலமாக எல்லாவிதமான கிரக தோஷங்களும் நீங்கி விடும்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது.
    • மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாலும் சுவாமியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பக்தர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    • வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று கார்த்திகை பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மானாமதுரை, திருப்புவனம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை ஆனந்தவல்லி சமேதசோமநாதர் சுவாமிகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சோமநாதர் சுவாமிக்கும், நந்தி தேவ ருக்கும் 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சோமநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சன்னதியை வலம் வந்து பிரதோஷ மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சிவன் கோவில், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது.
    • பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திரு மஞ்சனம், தேன், கரும்புச்சாறு விபூதி உள்ளிட்ட 18 வகை யான வாசனைத் திரவியங்க ளால் அபிஷேகம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெரு மான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவே லீஸ்வரர் கோவில், மாவு ரெட்டி பீமேஸ்வரர் கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில், பொத்தனூர் காசி விஸ்வநாதர் கோவில், பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்ப ரேஸ்வரர் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்ட வர் கோவிலில் உள்ள பருவ தஈஸ்வரர், பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெரு மானுக்கும், நந்திகேஸ்வ ரருக்கும் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆரா தனைகளும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது. இதில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    முன்னதாக நந்தி பகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரமேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் நந்திபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதேபோல் பாண்ட மங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தரு ளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    பிரதோஷம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் வண்ண மலர்களால் சாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதேபோல வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×