சோழவந்தானில் பிரதோஷ வழிபாடு

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது
சோழவந்தானில் பிரதோஷ வழிபாடு
Published on

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில விவசாய அணி துணைத்தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருது பாண்டியன் உட்பட பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

ரவிச்சந்திர பட்டர் பரசுராம் சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகள் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com