search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cholavantan"

    • சோழவந்தானில் ராமநவமி திருக்கல்யாணம் நடந்தது.
    • கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ராம பக்த சபாவின் சார்பில் ராம நவமிவிழா 4 நாட்கள் நடந்தது. ராம நாம பாராயணத்துடன் விழா தொடங்கியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை உஞ்சவிருத்தி நடைபெற்று ஒற்றை அக்ரகாரத்தில் இருந்து பெண்கள் வானவேடிக்கை, மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து இரட்டை அக்ரஹாரம் கிருஷ்ணன் கோவில் முன்பு அமைந்திருக்கும் திருமண வைபவம் நடக்கும் மேடையில் வந்து சேர்ந்தனர். அங்கு சீதா கல்யாணம் மற்றும் ஆஞ்சநேயர் விழா நடந்தது. இன்று இரவு சுவாமி புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ராம பக்த சபா நிர்வாகிகள் காசி விசுவநாதன், தலைவர் வரதராஜப் பண்டிட், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் மகாதேவன், உதவி தலைவர் ரமணி, இணைச்செயலாளர் விசுவநாதன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவில் மலையாளம் கிருஷ்ண அய்யர் சாரிட்டிஸ் வேத பாடசாலை, சீர்திருத்தினம் அய்யர் ரூரல் டெக்னாலஜி பவுண்டேசன் சார்பில் அன்னதானம் நடந்தது.

    எம்.வி.எம். குழுமத் தலைவரும், பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளருமான மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது.
    • சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகையாற்றின் கிழக்கு கரையில் அமைந்து விசாக நட்சத்திர தலமாக விளங்கி வரும் சனீஷ்வரர் கோவிலில் திருகணித பஞ்சாங்கபடியான வக்கிர நிவர்த்தி விழா நடந்தது. சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு நேற்று மாலை 6.45. மணியளவில் பெயர்ச்சி ஆனார். இந்த நிகழ்வையொட்டி அர்ச்சகர் ராமசுப்பிரமணி தலைமையில் யாகவேள்வி தொடங்கியது. பின்னர் மாவலிங்கம் தலவிருட்சமாக உள்ள மூலவர் சுயம்பு சனீஷ்வரருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவ அபிஷேகம் நடந்தது. பக்தர்களின் பெயர் ராசிக்கு பரிகாரம் செய்து எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்த வக்கிர பெயர்ச்சியையொட்டி கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் ஆவார்கள். இதில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதனை முன்னிட்டு சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரர், சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை பா.ஜ.க. மாநில விவசாய அணி துணைத்தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருது பாண்டியன் உட்பட பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ரவிச்சந்திர பட்டர் பரசுராம் சிவாச்சாரியார் ஆகியோர் பூஜைகள் செய்தனர்.

    ×