search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு
    X

    சிவன் கோவில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு

    • சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில், ஆஸ்பத்திரி ரோடு மாதேஸ்வரன் கோவில், பெருந்தலையூர் பிரகனநாயகி சமேத மகிழேஸ்வரர் கோவில் மற்றும் பட்டையகாளி பாளையம் தென்காளகஸ்தி கண்ணப்ப நாயனார் கோவில் ஆகிய கோவில் களில் சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவிலில் தீட்சை பெற்ற சிவனடியார்கள் பவானி திருமுறை கழகம் தியாகராஜா தலைமையில் தாங்கள் கொண்டு வந்திருந்த சிவலிங்க உற்சவர் திருமேனிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், திருநீர், சந்தனம், பன்னீர் போன்ற நவ திரவியங்களால் ஐந்து காலமும் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.

    தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடி சிறப்பு வழிபாடு செய்தார்கள். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள மூலவருக்கு ஐந்து கால அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் கவுந்தப்பாடி, வேலம்பாளையம், அய்யம்பாளையம், பொம்மன்பட்டி, க.புதூர், செந்தாம்பாளையம், சலங்கைபாளையம், பெருந்தலையூர், குட்டிய பாளையம், பி.மேட்டுப் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து பூஜையில் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×