என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎன்நேரு"

    • தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
    • பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.

    தி.மு.க. முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

    இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களோடு தொடர்ந்து எழுப் பிய கேள்விகளுக்குத் தேர் தல் ஆணையம் இதுவரை உரிய பதிலை அளிக்க வில்லை.

    ஆட்சிகளை மாற்றி அமைப்பது ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்களின் உரிமை. அதனைத் தேர்தல் ஆணையம் கையில் எடுப்பது, ஒன்றிய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம். அந்தச் செயலைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது.

    பீகாரைப் போலத் தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயன்றால், அதற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். தமிழ்நாட்டு மக்களை நேர் நின்று வீழ்த்த முடியாத எதிரிகளும் துரோகிகளும் குறுக்கு வழியைக் கையாண்டு வென்றிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். அதற்குத் தமிழர்கள் தக்கப் பதிலடி கொடுப்பார்கள். எஸ்.ஐ.ஆர். என்ற அநீதிக்கு எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்.

    மோடி அரசு அமைந்த பிறகு தன்னாட்சி அதிகா ரங்கள் கொண்ட சி.பி.ஐ, ஆர்.பி.ஐ, சி.ஏ.ஜி, என்.ஐ.ஏ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக் அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பா வையாக மாறின.

    இந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப நடக்க ஆரம்பித்தி ருக்கிறது. தேர்தல் ஆணையம் தன் நடுநிலை தன்மையை இழந்துவிட்டதற்குத் தொடர்ச்சியாக நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

    உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி முன்கூட்டியே பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் முன் னரே பிரச்சாரக் கூட்டங் களை நடத்தி விட்டு போனார் பிரதமர் மோடி. இதன் மூலம் தேர்தல் தேதி ரகசியத்தைத் தேர்தல் ஆணையம் காக்கத் தவறியது அப்பட்டமாகவே வெளிப் பட்டது.

    பீகாரில் பல லட்சக்க ணக்கானவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து ஏன் நீக்கினார்கள்? அதி லிருந்து சில லட்சக்க ணக்கானோரை மீண்டும் ஏன் சேர்த்தார்கள்? என்பதற்குத் தேர்தல் ஆணையம் தெளிவான பதில் அளிக்க வில்லை.

    ஜனநாயகத்தின் ஆணிவே ரான தேர்தலை நேர்மை யோடு நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி. ஆனால், தேர்தல்களில் தில்லுமுல்லு செய்து வெற்றியை ஈட்ட முனையும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளுக்குத் துணை போவதாகத் தேர்தல் ஆணையம் மாறிவிடக் கூடாது.

    பீகாரில் கடைப்பிடிக் கப்பட்ட தில்லு முல்லுகளை போல தமிழ்நாட்டிலும் செயல்படுத்தத் திட்ட மிட்டிருக்கிறார்கள். கள ஆய்வு மேற்கொள்ளப்படா மலேயே நமது வாக்கா ளர்களை நீக்கவும் வெளி வாக்காளர்களைச் சேர்க்க வும் முயற்சிகள் நடக்கலாம். இந்தச் சதியைத் தமிழ்நாடு ஒன்று திரண்டு போராடும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள்.
    • அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    அமைச்சர் கே.என். நேரு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க.வினர், நயினார் நாகேந்திரனை தலைவராக போட்டு ஒரு கூட்டத்தை கூட்டியுள்ளனர். அந்த கூட்டத்தில், தி.மு.க. ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பேசியிருக்கிறார்கள். அது அவர்களுடைய ஆசை. அந்த ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

    விவசாயத்தில், வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்த பயிர் இன்னும் பெரியதாக, செழிப்பாக வளரும். அதுபோல அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்.

    கடந்த 15 வருடங்களாக இந்த வேரோடு பிடுங்கும் வேலையைத்தான் பா.ஜ.க. பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் தமிழகத்தில் எதையும் செய்ய முடியவில்லை. தி.மு.க. கூட்டணிதான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. வருங்காலத்திலும் தி.மு.க.தான் மாபெரும் வெற்றி பெறும்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு கடந்த காலங்களில் 3 முறை வந்த அமித்ஷா, ஒவ்வொரு முறையும் 'கூட்டணி ஆட்சி' என்றே பேசி வருகிறார். ஆனால், அதுகுறித்து அவரும் விளக்கம் சொல்லவில்லை. அமித்ஷாவின் அருகிலேயே அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமியும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது இருண்ட ஆட்சி அவர்களது கண்ணுக்கு தெரியவில்லை. அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவர்கள் நினைப்பது நடக்காது. உண்மையில், அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள் பானக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், பா.ஜக வினரும் அ.தி.மு.க. கூட்டணியை விரும்பவில்லை.

    இப்படிப்பட்ட சூழ்நிலையை வைத்துக்கொண்டு, நாங்கள் ஜெயித்துவிடுவோம், ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது ஒருபோதும் நடக்காது.

    முதலமைச்சரை யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும், மீண்டும் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். பொதுமக்கள், குறிப்பாக மகளிர் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு இருந்த மகளிர் ஆதரவை எல்லாம் தாண்டி, இப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

    நடைபெறவிருக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும். எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

    தோற்றுப் போய் விடுவோம் என்ற பயத்தில் தான், பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வினர் பல்வேறு பிரச்சினைகளை செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க.விற்கு போட்டியே கிடையாது. எதிரணியில் யார் நின்றாலும், நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.
    • மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.

    நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

    அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

    திருச்சியில் 14-ந் தேதி திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. என்று மாவட்ட செயலாளர் கேஎன் நேரு எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #knnehrumla
    திருச்சி:

    திருச்சியில் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இது குறித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணிக்கு  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட,மாநகர நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப் பாளர்கள், துணை அமைப் பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனை வரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். 

    விழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கும் முப்பெரும் விழா, 18-ந் தேதி ஊழல் அ.தி.மு.க. அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. #knnehrumla
    சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை திடீரென உயர்த்திய அ.தி.மு.க. அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

    எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், வருகிற 27.7.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை, துவாக்குடி நகராட்சி, மணப்பாறை நகராட்சி, துறையூர் நகராட்சி ஆகிய நகராட்சி அலுவலகங்கள் முன்பு (காவல்துறை அனுமதிக்கும் இடம்) திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், முன்னாள், இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

    ×