நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் முன்னணி இசையமைப்பாளர்

நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுடன் இணையும்  முன்னணி இசையமைப்பாளர்
Published on

நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார் என தகவல் பரவி வருகின்றன. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com