கருப்பன் நாளைக்கு வரான்.. சூர்யா ரசிகர்களை மேலும் காத்திருக்க வைத்த படக்குழு

படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால் படக்குழு அறிவித்த நேரத்தில் டீசர் வெளியாகவில்லை.
கருப்பன் நாளைக்கு வரான்.. சூர்யா ரசிகர்களை மேலும் காத்திருக்க வைத்த படக்குழு
Published on

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனையடுத்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை மேலும் காத்திருக்கும் வகையில் சூர்யா கருப்பு உடை அணிந்திருந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என ஆர்ஜே பாலாஜி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது சூர்யா ரசிகர்களை பெரிதும் ஏமாற்றும் வகையில் இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com