சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே பாலாஜி - அதிகாரப்பூர்வ தகவல்

நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார்.
சூர்யா 45 படத்தை இயக்கும் ஆர்.ஜே பாலாஜி - அதிகாரப்பூர்வ தகவல்
Published on

நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் . இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார். இந்த கூட்டணி புதியதொரு கூட்டணியாக இருப்பதால் திரைப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரின் அருவாள், குதிரை என இடம் பெற்றுள்ளதால். திரைப்படம் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பற்றிய மற்றி தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com