ஆர்.ஜே.பாலாஜி படத்தில் சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஆர்.ஜே.பாலாஜி தற்போது நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி
லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி
Published on

ஆர்.ஜே.பாலாஜி தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை மாதம் சிகையலங்கார நிபுணர்களிடம் பயிற்சி பெற்றுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி
லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

லோகேஷ் கனகராஜ் - ஆர்.ஜே.பாலாஜி

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜுடன், ஆர்.ஜே.பாலாஜி எடுத்துக் கொண்ட புகைப்படமும் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com