கிரிக்கெட் போட்டிக்கு இடையில் ஆர்.ஜே.பாலாஜி பட போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
Published on

வடகறி, நானும் ரவுடி தான், தேவி, வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலடைந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அதன்பின்னர் எல்கேஜி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களில் கதாநாயகனாக நடித்து இணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

சிங்கப்பூர் சலூன்
சிங்கப்பூர் சலூன்

சிங்கப்பூர் சலூன்

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியின் துவக்கத்தில் வெளியிட்டார். இப்படத்திற்கு 'சிங்கப்பூர் சலூன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா', 'ஜூங்கா' படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com