கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார் நடிகர் தனுஷ் - வைரல் வீடியோ

நடிகர் தனுஷ், கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சென்னையில் வைத்து சந்தித்தார். ரசிகர்கள் தனுஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார் நடிகர் தனுஷ் - வைரல் வீடியோ
Published on

தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்திற்கு `D55' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி `D55' படத்தை பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். 'D55' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்கிறார்கள். இந்த படத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், மாவட்ட வாரியாக தனது ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சென்னையில் வைத்து சந்தித்தார். அப்போது ரசிகர்கள் தனுஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த சந்திப்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அசைவ உணவு விருந்து, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com