search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டியை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்- ரசிகர்கள் பேட்டி
    X

    இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டியை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்- ரசிகர்கள் பேட்டி

    • பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.
    • டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் நேற்று இரவு முதலே குவிந்து இருந்தனர். அவர்கள் கூறியதாவது:-

    மகேஷ், சாந்தகுமார், பரணி (காஞ்சீபுரம்):-நாங்கள் காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று மாலையே இங்கு வந்துவிட்டோம். அப்போது கவுண்டர் பகுதியில் தடுப்பு வேலி கூட அமைக்கவில்லை. அதன் பிறகுதான் அமைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடப்பதால் அதை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளோம். ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்துவிட்டது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்று நேற்று மாலையிலேயே வந்துவிட்டோம்.

    முரளி (சென்னை):-நான், நண்பர்கள் 7 பேருடன் டிக்கெட் வாங்க வந்தேன். இப்போட்டியை பார்க்க உற்சாகத்துடன் இருக்கிறோம். நள்ளிரவு முதலே இங்கு தூங்காமல் காத்திருந்தோம். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதுதான் முக்கியம். கண்டிப்பாக இந்தியா ஜெயிக்கும்.

    ராஜசேகர்-புவனேஸ்வரி தம்பதி (நாவலூர்):-இன்று அதிகாலை 4.30 மணிக்கு நாவலூரில் இருந்து இங்கு வந்தோம். காலை 5.30 மணிக்கு இங்கு வந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

    ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் வழங்கப்படுவதால் நாங்கள் இருவரும் டிக்கெட் வாங்க வந்தோம். எங்களுக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.

    முல்லைவேந்தன் (சோழிங்கநல்லூர்):-நான் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேப்பாக்கத்தில் போட்டி நடப்பதால் அதை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்தது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்க வந்தேன். டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×