உலக கோப்பை கால்பந்து போட்டியில் 'நம்ம தஞ்சாவூர்' பதாகையை காண்பித்த ரசிகர்கள்

தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ’நம்ம தஞ்சாவூர்’ என்ற பதாகையை காண்பிக்கும் ரசிகர்கள்.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ’நம்ம தஞ்சாவூர்’ என்ற பதாகையை காண்பிக்கும் ரசிகர்கள்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதே போல் பல இடங்களிலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த போர்டு முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு தற்போது உலக அளவில் பரவி புகழ்பெற்று விளங்குகிறது. கத்தார் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பல ரசிகர்கள் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகையை காண்பித்தவாறு போட்டியை ரசித்து வருகின்றனர்.

தினந்தோறும் நடக்கும் போட்டியில் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகை தென்படுவதை நம்மால் காண முடிகிறது.

என் மூலம் தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com