search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாரிசு, துணிவு திரைப்படம் வெளியீடு: நெல்லையில் விஜய், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்- தியேட்டர்களில் திருவிழா
    X

    நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    வாரிசு, துணிவு திரைப்படம் வெளியீடு: நெல்லையில் விஜய், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்- தியேட்டர்களில் திருவிழா

    • விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதையொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • இன்று தியேட்டர்கள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு திரைப்படங்கள் இன்று வெளியானது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் இந்த திரைப்படங்கள் திரை யிடப்பட்டது. நெல்லை மாநகரில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் 6 தியேட்டர்களில் உள்ள 11 திரைகளில் வெளியானது.

    நீண்ட ஆண்டுகளுக்கு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதை யொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சிறப்பு காட்சிகள்

    இந்நிலையில் படம் வெளியானதையொட்டி விஜய், அஜித் ரசிகர்கள் இன்று தியேட்டர்களில் திருவிழாபோல் கொண்டாடி னர். ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியாக அதிகாலை 1 மணிக்கு துணிவு திரைப்படமும், 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் வெளியானது. எனினும் ரசிகர்கள் நேற்று இரவு முதலே தியேட்டர்களில் குவிந்தனர். அவர்கள் ஆட்டம், பாட்டம் உற்சா கத்துடன் கொண்டா டத்தில் ஈடுபட்டனர்.

    தள்ளுமுள்ளு

    பொங்கல் திரைப்படங்கள் வெளியாவதையொட்டி ரசிகர்கள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறி இருந்தார்.

    இதையொட்டி தியேட்டர்கள் முன்பு இன்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை தியேட்டர்களில் ரசிகர்களுக்குள் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர்கள் விஜய குமார், ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் திரைப்படத்தினை பார்த்து சென்றனர். இன்று திரைப்படங்கள் வெளியா வதையொட்டி தியேட்டர்கள் முன்பு விஜய், அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டர் முன்பு திருவிழாபோல் காணப்பட்டது.

    Next Story
    ×