என் மலர்
சினிமா செய்திகள்

பாக்யராஜ்-க்கு கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, ஊதியம் கொஞ்சம் கூட கிடைக்கல- ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
என்னை பொறுத்தவரைக்கும் பாக்யராஜ்-க்கு கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, ஊதியம் கொஞ்சம் கூட கிடைக்கலை. அவர் எப்போதும் யாருக்கும் ஜால்ரா போட்டது கிடையாது. மனதில் என்ன பட்டதோ அதை உடனே சொல்லிவிடுவார். அதில் உண்மை இருக்கும் நியாயம் இருக்கும்.
மக்கள் திலகம், புரட்சி தலைவர் எம்ஜிஆர் சார் அவர்கள், என்னுடைய திரையுலக வாரிசு பாக்யராஜ் என்று சொன்னால் எந்த மாதிரி அவரை நேசித்திருப்பார்கள். அதுமட்டுமில்லை அவரே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். அவ்வளவு எளிதில் எம்ஜிஆர் இதயத்தில் போக முடியாது. எப்படி அண்ணா இதயத்தில் எம்ஜிஆர் சார் போனார்களோ அந்த மாதிரி எம்ஜிஆர் சார் இதயத்தில் பாக்யராஜ் போனார். அவர் இதயக்கனி.
இவ்வாறு அவர் கூறினார்.






