நடிகர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? - நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்த ரஜினி

ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
 விமான நிலையத்தில் படுகர் இன நடனமாடிய மாணவிகள், நடிகர் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி.
 விமான நிலையத்தில் படுகர் இன நடனமாடிய மாணவிகள், நடிகர் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சி.
Published on

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கார் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு சென்றார்.

விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். இந்த படம் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்றார்.

தொடர்ந்து ரஜினிகாந்திடம் திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக பயணிகள் தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிகள் படுகர் இன நடனமாடி, பயணிகளை வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த்துக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடனமாடிய மாணவிகள், ரஜினியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com