என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரஜினிகாந்தை தி.மு.க. மிரட்டியதா?- அமைச்சர் ரகுபதி விளக்கம்
- ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது.
- எந்த மிரட்டலுக்கும் அடிபணியமாட்டார் என்பது நாடு அறிந்த உண்மை.
தி.மு.க. அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது "தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே மாற்ற வேண்டும் என அரசியலுக்கு வர நினைத்த ரஜினியை தி.மு.க. குடும்பம் மிரட்டியது. ரஜினியை விமர்சிக்கவில்லை. மிரட்டலையும் தாண்டி அரசியலுக்கு வரும் மன வலிமை விஜயிடம் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வந்தபோதிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அஞ்சவில்லை" எனக் கூறியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி இது தொடர்பாக கூறியதாவது:-
ரஜினி காந்தை யாரும் மிரட்ட முடியாது. எந்த மிரட்டலுக்கும் அடிபணியமாட்டார் என்பது நாடு அறிந்த உண்மை. திமுக மிரட்டியது எனச் சொல்வது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயத்திற்காக அப்படிப்பட்ட குற்றச்சாட்டை விஜய் கட்சியை சேர்ந்தவர் சொல்லலாம்.
எங்களை பொறுத்தவரை அவர் எங்களுடைய நண்பர். 1996-ல் திமுக கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர் மரியாதைக்குரிய ரஜினி காந்த். அவரை பற்றி எந்த குறையும் திமுக பற்றி சொல்லாதீர்கள்.
இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.






