என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஞானபீட விருது"

    • இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

    இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.

    ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து வைரமுத்துக்கு நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து.

    'வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்' என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
    • 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ஞானபீட விருது கிடைக்கிறது

    இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.

    ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து வைரமுத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது!

    காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது!

    தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

    தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வாழ்த்துகிறேன்! கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது!" என்று தெரிவித்துள்ளார்.

    24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ஞானபீட விருது கிடைக்கிறது

    இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.

    ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பின்பு வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • குல்சார் இந்தி பட உலகில் முன்னணி பாடலாசிரியர் ஆவார்.
    • சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார்.

    புதுடெல்லி:

    சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா மற்றும் புகழ்பெற்ற உருது கவிஞர் குல்சார் ஆகியோருக்கு 2023-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூடத்தில் உள்ள துளசி பீடத்தின் தலைவரான ராமபத்ராச்சார்யா, புகழ்பெற்ற இந்து ஆன்மீகத் தலைவர், கல்வியாளர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்.

    குல்சார் இந்திப் பட உலகில் முன்னணி பாடலாசிரியர் ஆவார். சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

    2002 -ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற குல்சார் 2013-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 5 முறை தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×