என் மலர்
சினிமா செய்திகள்

மதறாஸ் மாபியா கம்பெனி விமர்சனம்
- படத்தில் தாதாவாக ஆனந்தராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
- ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள் என்பதை இயக்குனர் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
நாயகன் ஆனந்தராஜ் தாதாவாக இருக்கிறார். இவர் தலைமையை விரும்பாத சில அதிருப்தியாளர்கள், கூடவே இருந்து அவரை கொல்ல சதி திட்டம் தீட்டுகின்றனர். இதற்கிடையே போலீஸ் அதிகாரி சம்யுக்தா தலைமையில் ஆனந்தராஜ் பின்னணி குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்படுவதுடன் ஆனந்தராஜை என்கவுண்டர் செய்யவும் திட்டம் போடுகிறார்கள்.
இறுதியில் என்கவுண்டரில் ஆனந்தராஜ் சிக்கினாரா? இல்லையா? ஆனந்த ராஜ் கூட இருப்பவர்களின் சதி திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மதறாஸ் மாபியா படத்தில் தாதாவாக ஆனந்தராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்சில் அவரது தோற்றம் எதிர்பாராதது. என்கவுண்டர் செய்ய துடிக்கும் சம்யுக்தா, மிடுக்கான தோற்றத்தில் மிரட்டி இருக்கிறார். ஆனந்தராஜ் மனைவிகளாக தீபா சங்கர், சசி லயா, காதலியாக ஷகீலா ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பு.
முனீஷ்காந்த், மிப்பு கோஷ்டி ஆனந்தராஜை கொல்ல முயன்று தோற்று காமெடி செய்துள்ளனர். மேலும் ஆராத்யா, ரிஷி ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ரவுடிகளுக்கான கதையில் காதல், குடும்ப சென்டிமெண்ட், காமெடி கலந்து எழுதி இயக்கியுள்ளார் ஏ.எஸ்.முகுந்தன். ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள் என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். தேவை இல்லாத வசனங்கள் படத்திற்கு பலவீனம்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது. அசோக் ராஜ் ஒளிப்பதிவு இயல்புபாக ரசிக்க வைக்கிறது.






