என் மலர்
- படத்தை நெல்சன் இயக்குகிறார்.
- ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர். தற்காலிகமாக 'KH x RK Reunion' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். படத்திற்கு அனிரூத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இன்பநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் புரோமோ வீடியோ எல்லாம் வெளியாகி வைரலானது. ஆனால் ரசிகர்கள் பலருக்கும் இருக்கும் கேள்வி படத்தில் யார் ஹீரோ, யார் வில்லன்? என்பதுதான். புரோமோவில் கூட கமலும் இந்தக் கேள்வியை கேட்டிருப்பார். இந்நிலையில் இருவருமே வில்லன் இல்லை எனவும், மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டிதான் இப்படத்தின் வில்லன் எனவும் தற்போது தகவல் வெளியாகிவருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ரஜினி தற்போது நடித்து வரும் 'ஜெயிலர் 2' மற்றும் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படங்களை முடித்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் 2027-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- திருமண விழாவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.
- விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா வடிவமைத்திருந்தார்.
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நேற்று நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
திருமண புகைப்படங்களை நேற்று மாலை விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டனர். புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது. திருமண விழாவில் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. இருவரது தோற்றமும் ராமர்-சீதாவை நினைவுப்படுத்துகிறது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஆடைகளை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா வடிவமைத்திருந்தார். சிவப்பு நிற பார்டருடன் கோவில் மைய கருக்கள் சேலையின் விளிம்பில் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது.

இது ஐதராபாத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களின் ஆன்மிகத்தை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும் பழங்கால தங்கத்தை பயன்படுத்தி ஒரு அற்புதமான கலை திறனோடு பக்தி மணத்துடன் ராஷ்மிகா ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. விஜய் தேவரகொண்டா வேட்டி சிண்டூர் அங்க வஸ்திரத்துடன் கோவில்களின் கலைத்திறனுடன் எம்பிராய்டரி செய்யப்பட்டு புனித கட்டிட கலையின் சின்னங்கள் ஆடையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமண ஜோடிகளின் ஆடை அணிகலன்கள் விருந்தினர்கள் மட்டுமல்ல பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
வருகிற மார்ச் 4-ந்தேதி விஜய் தேவரகொண்டாவுக்கும்-ராஷ்மிகாவுக்கும் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் இந்திய திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்த இருக்கின்றனர். விதவிதமான சைவ, அசைவ பிரமாண்ட விருந்துடன் நடைபெறும் திருமண வரவேற்பு விழாவை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா குடும்பத்தினர் பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.
கணினி துறையில் பணியாற்றும் ஆரி அர்ஜுனன், பணி மாறுதலால் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து, புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் யாரும் வசிக்காத வீட்டில் தங்குகிறார். வேலை வாழ்க்கையுடன், தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்ட முன்னாள் காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.
அந்த வீட்டில் காதலியின் புகைப்படத்தை காணும் அதிர்ச்சியுடன், இரவு நேரங்களில் தொடரும் அமானுஷ்ய கனவுகள் அவரை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. கனவா, நிஜமா என்ற சந்தேகத்துடன் தொடங்கும் இந்த மர்ம பயணம், பல அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
இறுதியில் காணாமல் போன காதலி கிடைத்தாரா? கனவுகளுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் ஆரி, சாதாரண ஐடி இளைஞராக தொடங்கி, மர்மங்களை அவிழ்க்கும் மனிதராக மாறும் பயணத்தை நம்பகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் இழப்பு, குற்ற உணர்வு, மன அழுத்தம், அமானுஷ்ய அச்சம் என பல்வேறு உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தி கதையை தாங்கிச் செல்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் பவித்ரா மற்றும் தீப்ஷிகா இருவரும் கதைக்கு தேவையான அளவில் நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா, முதல் பாதியில் முகபாவனைகளால் கவனம் ஈர்த்தாலும், அமானுஷ்ய அம்சங்கள் அதிகமாக இருப்பதால் அவரது வில்லத்தனம் முழுமையாக வெளிப்படவில்லை. தலைவாசல் விஜய் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் திரைக்கதை நகர்வுக்கு உதவியாக இருக்கின்றன.
இயக்கம்
திகில், கிரைம் திரில்லர், குடும்ப உணர்வு, சமூக கருத்து என பல அடுக்குகளுடன் கதையை வடிவமைத்துள்ள இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டியன், ஆரம்பத்தில் பரபரப்பாக நகரும் திரைக்கதையை இடைப்பட்ட பகுதிகளில் சற்று மெதுவாக்கினாலும், தொடர்ச்சியான திருப்பங்கள் மூலம் மீண்டும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் நோக்கி செல்லும் போது மர்மங்கள் அவிழும் விதம் படத்தை கவனத்துடன் பார்க்க வைக்கிறது.
இசை
தரண்குமார் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், பின்னணி இசை திகில் காட்சிகளில் தேவையான பதட்டத்தை உருவாக்குகிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண், அடுக்குமாடி குடியிருப்பின் தனிமையும் நான்காவது தளத்தின் மர்மமான சூழலையும் சரியாக பதிவு செய்து இருக்கிறார்.
ரேட்டிங்-2.5/5
- இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
- விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது.
நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர். கீதா கோவிந்தம், புஷ்பா ஆகிய படங்களில் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்திலும், கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்தார். ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதலே அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர்.
இருவரும் வெளிப்படையாக தங்களது காதலை அறிவிக்காதபோதும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.
இந்த நிலையில் மிக சமீபத்தில் அவர்களது திருமணம் பற்றிய தகவல் வெளிவந்தது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவரது திருமணம் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனை அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.
இதில் இருவீட்டார் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சரியாக நேற்று காலை 10.10 மணிக்கு இந்த திருமணம் நடந்தது. முதலில் விஜய் தேவரகொண்டா குடும்பத்து வழக்கப்படி தெலுங்கு பாரம்பரிய முறையிலும், அதனைத்தொடர்ந்து ராஷ்மிகா குடும்ப வழக்கப்படி கொடவா பாரம்பரிய முறையிலும் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, தங்களின் பாரம்பரியப்படி மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கியுள்ளாராம்.
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதிக்கு திரையுலகினரும். ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


இதனிடையே வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பே டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்திற்கு சென்ற இருவரும் சிறிது நேரம் உரையாடி புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
இதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனவே மார்ச் 4இல் இவர்களது திருமண வரவேற்பில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.
- தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
நடிகர் தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்றை பெற்றதை தொடர்ந்து 'வை ராஜா வை', 'லால் சலாம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தற்போது புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9-வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதற்கு முன்னதாக 'வை ராஜா வை' படத்தில் ஐஸ்வர்யா- யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்து பணியாற்றியது. தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
- இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ளார்.
- இப்படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'காதல் ரீசெட் ரிப்பீட்'. இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜூன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புதுமையான காதல் கதையை சொல்லும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ளார். இதனிடையே, இப்படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், 'காதல் ரீசெட் ரிப்பீட்' படம் வருகிற 6-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளது.
- நுரையீரல் தொற்று காரணமாக பாரதிராஜா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- பாரதிராஜா உடல்நிலை குறித்த வதந்திகளும் அவ்வப்போது பரவி வந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதேவேளை அவரது உடல்நிலை குறித்த வதந்திகளும் அவ்வப்போது பரவி வந்தது. இதற்கிடையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.
பாரதிராஜா 'டிஸ்சார்ஜ்' ஆன தகவல் திரையுலகினரையும், ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
- ‘முஸ்தபா முஸ்தபா’ படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது சுரேஷ் ரவியுடன் இணைந்து 'முஸ்தபா முஸ்தபா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார்.
பிரவீன் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள 'முஸ்தபா முஸ்தபா' படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த நிலையில், 'முஸ்தபா முஸ்தபா' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் இப்படம் வருகிற 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமூக வலைதளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்களை திட்டமிட்டே வெளியிடுகிறார்கள்.
- இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற கூடாது.
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடி கையாக கவர்ந்து வருகிறார், அனுபமா பரமேஸ் வரன். சமீபத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்த 'பைசன்' படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. இதற்கிடையில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் வெளியாவது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
"சமூக வலைதளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்களை திட்டமிட்டே வெளியிடுகிறார்கள். இதுபோன்ற விஷம ஆசாமிகளை களையெடுக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற கூடாது. இதுபோன்ற கேடுகெட்ட சிந்தனையாளர்கள் தண்டிக்கப்பட்டால் தான், இந்த கேவலமான விஷயங்கள் ஒழிக்கப்படும்" என்று ஆவேசம் தெரிவித்துள்ளார்.
- எந்த சினிமாவாக இருந்தாலும் சரி, நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே, பார்க்கவே விரும்புகிறார்கள்.
- அது என்ன வகையான ஈர்ப்பு என்று எனக்கு தெரியவில்லை.
முன்னணி நடிகையான டாப்சி, சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவர் கூறுகையில், "பாலிவுட் சினிமா நடிகைகளின் மார்பழகையும், தென்னிந்திய சினிமா நடிகைகளின் இடையழகையும் அதிகம் வெளிக் காட்டுகிறது என்று நான் கூறியது வேறு மாதிரியாக சென்றுவிட்டது.
பெண்களை ஒரு குறிப்பிட்ட பார்வையில் மட்டுமே அணுகுகிறார்கள் என்பது தான் இங்குள்ள முக்கிய சிக்கல். எந்த சினிமாவாக இருந்தாலும் சரி, நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே, பார்க்கவே விரும்புகிறார்கள். அது என்ன வகையான ஈர்ப்பு என்று எனக்கு தெரியவில்லை.
இந்தி சினிமாவில் நான் பெரியளவில் கவர்ச்சி காட்டவில்லை. எனவே என்னிடம் யாரும் அப்படி கேட்டு வந்ததில்லை. சில படங்களில் கவர்ச்சி காட்டுமாறு இயக்குனர்கள் என்னிடம் சங்கடத்துடன் தெரிவித்துள்ளார்கள். இது எனக்கும் சங்கடங்களை வரவழைக்கும். இயக்குனர் என்பவர் கப்பலின் கேப்டன் போன்றவர். எனவே இயக்குனர் சொல்வதை, வரம்பு மீறாத வகையில் நடிகைகள் கேட்டு நடிக்கிறார்கள். முன்னணி நடிகையாக எல்லா விதமான நடிப்பையும் வெளிக்காட்டுவது அவசியம்", என்று குறிப்பிட்டார்.
- தனுஷின் 3 படம் நல்ல வரவேற்பைப் பெற்றது
- நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ரா வை' படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத்தொடர்ந்து தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து 'லால் சலாம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், தற்போது புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9வது படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
- கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியவர்கள்
- இரண்டு முறை திருமணம் நடைபெற்றுள்ளது.
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்ததன்மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியவர்கள் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா. இப்படங்களில் இருந்து இருவரும் காதலிப்பதாக நீண்டநாட்களாக, வருடங்களாக பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் எவற்றிற்கும் பதிலளிக்காமல் அமைதியாகவே நட்பை தொடர்ந்தது இந்த ஜோடி.
இந்நிலையில் ஜனவரி தொடக்கத்திலிருந்தே இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பை, ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் 'விரோஷ்' என்ற பெயரிலேயே அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் காலை 10:10 மணிக்கு தெலுங்கு பாரம்பரியப்படியும், ராஷ்மிகா கர்நாடகாவின் குடகு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மாலை 4:30 மணிக்கு அவரது குடும்ப முறைப்படி கொடவா பாரம்பரியப்படியும் என இருமுறை திருமணச் சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தம்பதியினருக்குக் கடிதம் மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆனால் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தம்பதியினர் தற்போது அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படங்களை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்,
"ஒரு நாள், நான் அவளை மிகவும் தேடினேன் (Miss பண்ணினேன்).
அவள் கூட இருந்திருந்தால் என் நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றும் வகையில் அந்தத் தேடல் இருந்தது.
அவள் எனக்கு எதிரே அமர்ந்திருந்தால், நான் உண்ணும் உணவு இன்னும் முழுமையாகவும், திருப்தியாகவும் இருந்திருக்கும் என்று தோன்றியது.
அவள் என்னுடன் இருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாகத் தெரியாமல் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
நான் எங்கே இருந்தாலும், அந்த 'வீடு' போன்ற உணர்வையும், அமைதியையும் உணர அவள் எனக்குத் தேவைப்பட்டாள்.
அதனால்,
என் உயிர் நண்பியை... என் மனைவியாக்கிக் கொண்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.








