என் மலர்
நீங்கள் தேடியது "புதிய படம்"
- தனுஷின் 3 படம் நல்ல வரவேற்பைப் பெற்றது
- நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ரா வை' படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத்தொடர்ந்து தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து 'லால் சலாம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், தற்போது புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 9வது படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
- படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது
- படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார்.
முருகா, புடிச்சிருக்கு, கோழி கூவுது, பெஸ்டி, பிரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்த அசோக்குமார் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் 'அலப்பறை'. கதாநாயகியாக பிரபல இயக்குநரும், நடிகருமான "யார்" கண்ணனின் மகள் சாயாதேவி நடித்திருக்கிறார். சி.எஸ்.கே சினிமா தயாரிக்கும் இப்படத்தை சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கிறார்.
பி.எல் தேனப்பன், 'யார்' கண்ணன், 'நமோ' நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம், வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி, தம்பிசிவன், ஹரிநாத், ரதியா ஹரி, ஆலந்தூர் பிரவீன்குமார் மற்றும் வேல்குமார் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான். விதியோ அவனை ஒரு ஆன்மீகத் தலைவனாக மாற்றி விட்டது. முடிவில் அவன் காதலின் நிலை என்ன? தன் அரசியலின் பார்வை என்ன?அல்லது ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா? என்பதே கதைகளம் என்கிறார் இயக்குநர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






