என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manjumel Boys"

    • தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.
    • வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை.

    திருவனந்தபுரம்:

    சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மலையாள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் விழுந்த வாலிபரை நண்பர்கள் சேர்ந்து காப்பாற்றும் கதையை கொண்ட அந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    கேரள மாநிலம் மட்டு மின்றி தமிழகத்திலும் பல திரையரங்குகளில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் காரணமாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ.220 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இந்நிலையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாகி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    மேலும் பண மோசடிக்காக டிக்கெட் வசூல் எண்ணிக்கையை உயர்த்தியிருப்பதாகவும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்பட குழுவினர் மீது புகார் எழுந்திருக்கிறது. இதேபோன்று மேலும் சில திரைப்படங்களை எடுத்தவர்களும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆகவே கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் எடுக்கப்பட்ட அனைத்து வெற்றி படங்களின் தயாரிப்பு செலவுகளை ஆய்வு செய்ய அமலாக்கத் துறை தயாராகி வருகிறது. 2024-ம் ஆண்டில் கடந்த 5 மாதங்களில் மலையாள திரையுலகம் ரூ720 கோடி வசூல் செய்திருக்கிறது. அதிலும் 'மஞ்சுமெல் பாய்ஸ்', 'ஆடுஜீவிதம்', 'ஆவேசம்', 'பிரேமலு' ஆகிய 4 மலையாள திரைப்படங்களின் வசூல் ரூ100 கோடியை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மோசடி புகார் கூறப்பட்டுள்ள 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத் துறை இயக்குனரகம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல்.

    மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள மொழியில் ரிலீசான போதிலும் இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளை குவித்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், மஞ்சுமெல் பாஸ்ட் பட இயக்குனர் சிதம்பரம் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய இந்தி படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    • ரசிகர்களிடம் அங்கீகாரம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடந்துள்ளது,
    • கினோபிராவோ விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் மஞ்சுமெல் பாய்ஸ்.. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொடைக்கானலில் இருக்கும் குணா குகைக்கு சுற்றுலா வரும் 11 நண்பர்களில் ஒருவர் உள்ளே சிக்கிக் கொள்ள அவரை மீட்பதே கதை.

     

    கமல் நடிப்பில் வெளியான குணா படத்தின் நியாபகங்கங்களை இப்படம் தந்ததால் தமிழிலும் மஞ்சுமெல் பாய்ஸ் பெரிதும் கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் ரூ.240 கோடிகளுக்கும் அதிகமான வசூலைக் குவித்த படமாகவும் இது மாறியது. இந்நிலையில் ரசிகர்களிடம் அங்கீகாரம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடந்துள்ளது.

     

    ரஷியாவில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய கினோபிராவோ திரைப்பட விழாவில் மஞ்சுமெல் பாய்ஸ் திரையிடப்படுகிறது. அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் நேற்று [செப்டம்பர் 30] திரையிடப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் இன்றும் [அக்டோபர்1] தொடர்ந்து இரண்டாவது நாளாக திரையிடப்படுகிறது. கினோபிராவோ விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2022 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணி 3-வது முறையாக கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது.
    • குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

    2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றார்.

    மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கால்பந்து உலக கோப்பையை வென்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, FIFA உலகக்கோப்பை இன்ஸ்டா பக்கத்தில் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்ற வரிகளோடு இளையராஜா பாடலை வெளியிட்டுள்ளனர்.

    கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்மையில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமேல் பாய்ஸ்' திரைப்படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியிருந்தனர். இதனையடுத்து இந்த பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×