என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
முதல் முறையாக மலையாள சினிமா!.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
- ரசிகர்களிடம் அங்கீகாரம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடந்துள்ளது,
- கினோபிராவோ விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளது.
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் மஞ்சுமெல் பாய்ஸ்.. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொடைக்கானலில் இருக்கும் குணா குகைக்கு சுற்றுலா வரும் 11 நண்பர்களில் ஒருவர் உள்ளே சிக்கிக் கொள்ள அவரை மீட்பதே கதை.
கமல் நடிப்பில் வெளியான குணா படத்தின் நியாபகங்கங்களை இப்படம் தந்ததால் தமிழிலும் மஞ்சுமெல் பாய்ஸ் பெரிதும் கொண்டாடப்பட்டது. சர்வதேச அளவில் ரூ.240 கோடிகளுக்கும் அதிகமான வசூலைக் குவித்த படமாகவும் இது மாறியது. இந்நிலையில் ரசிகர்களிடம் அங்கீகாரம் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்கீகாரம் கிடந்துள்ளது.
ரஷியாவில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய கினோபிராவோ திரைப்பட விழாவில் மஞ்சுமெல் பாய்ஸ் திரையிடப்படுகிறது. அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் நேற்று [செப்டம்பர் 30] திரையிடப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் இன்றும் [அக்டோபர்1] தொடர்ந்து இரண்டாவது நாளாக திரையிடப்படுகிறது. கினோபிராவோ விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.