பாலிவுட்டில் களமிறங்கும் "மஞ்சுமெல் பாய்ஸ்" இயக்குனர்

மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல்.
பாலிவுட்டில் களமிறங்கும் "மஞ்சுமெல் பாய்ஸ்" இயக்குனர்
Published on

மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள மொழியில் ரிலீசான போதிலும் இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டுகளை குவித்தனர். மஞ்சும்மல் பாய்ஸ் படம் வெளியான 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக தமிழ் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், மஞ்சுமெல் பாஸ்ட் பட இயக்குனர் சிதம்பரம் பாலிவுட்டில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஃபாண்டாம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய இந்தி படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com