என் மலர்

  நீங்கள் தேடியது "leader"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கும் பல தொல்லைகள் வந்தன.
  • ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைத்தன்மை இல்லை.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

  கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசும் போது, ஓ.பன்னீர்செல்வத்திடம் நிலைத்தன்மை இல்லை. மிரட்டுகிறவர்களுக்கு பயந்து பதவியை விட்டு விலகினால், இயக்கத்தை எப்படி வழிநடத்த முடியும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது அவருக்கும் பல தொல்லைகள் வந்தன. அதனை அவர் தைரியமாக எதிர்கொண்டார்.

  பெருந்தன்மையுடன் அ.தி.மு.க. வளர வேண்டும் என்பதற்காக எடப்பாடி தலைமையில் ஒற்றை தலைமை அமைக்க வழிவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  கூட்டத்தில் மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர்கள் வசந்தா, சந்தனம், பொருளாளர் அமலிராஜன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், சார்பு அணி செயலாளர்கள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, துணைச் செயலாளர் வலசை வெயிலூமுத்து,அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா,மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், இளைஞர்பாசறை தனராஜ்,சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர் பிரபாகர், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், முனியசாமி, சரவணபெருமாள், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், நட்டார் முத்து , சேவியர், ஓன்றிய செயலாளர் காசிராஜன், பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ,துணைச் செயலாளர் டைகர் சிவா, மற்றும் ரமேஷ் கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர் .

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானாவில் மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் கைது செய்யப்பட்டதன் மூலம் தலைவர்கள் மீதான தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவிதுள்ளது. #MaoistLeader #Arrest #Telangana
  ஐதராபாத்:

  தெலுங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாத்ரத்ரி-கோதாகுடம் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில், மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் பிடிபட்டார்.

  அவர் பெயர் பி.ரூபா என்ற சுஜாதா. மாவோயிஸ்ட்டு இயக்கத்தின் மண்டல குழு செயலாளராக பதவி வகித்து வருகிறார். தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில், கொலை, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட குற்றங்களை செய்துள்ளார். 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கிறார். இவருடைய கணவரும் மாவோயிஸ்ட்டு இயக்கத்தின் முக்கிய பிரமுகர்தான்.

  ரூபாவை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தன. தெலுங்கானாவில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சமீபத்தில் நடந்த மாவோயிஸ்ட்டு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ரூபா கூறினார். இதற்காக, தாக்குதல் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

  ரூபா கைது மூலம், இந்த திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், தாக்குதல் குழுவினரின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு, போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சுனில்தத் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 49 ஆண்டுகள் முடிவடைவதை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். #DMK #Karunanidhi
  சென்னை:

  பெரியார் உடனான கருத்து வேறுபாட்டுக்கு பின்னர் ராயப்பேட்டை ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகம் 1967-ல் தமிழகத்தில் ஆட்சிய பிடித்தது. அப்போது முதல் இப்போது வரை தேசிய கட்சிகள் தமிழகத்தில் தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டதில் திமுகவின் பங்கு அதிகம் என்றே கூறலாம்.

  திமுகவில் தலைவர் என்ற பதவி இல்லாமலேயே அண்ணா கட்சியை தொடங்கினார். காரணம் தலைவர் பதவி தனது வழிகாட்டியாக பாவித்த ஈ.வெ.ரா.பெரியாருக்கானது என்று அந்த இடத்தை அண்ணா காலியாகவே வைத்திருந்தார். மரணம் வரை அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கட்சியின் தலைமை பொறுப்பு யாருக்கு? என்று எழுந்த கேள்வி கட்சியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.  கருணாநிதிக்கும், நாவலர் என்று அழைக்கப்படும் நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி இருந்த நிலையில், எம்.ஜி.ஆர் உள்பட பல மூத்த தலைவர்கள் முதல்வர் பதவியை கருணாநிதிக்கும், கட்சித்தலைமை பதவியில் நெடுஞ்செழியனை அமர்த்த சம்மதித்தனர்.

  இறுதியில் கட்சிக்கு தலைவர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு கருணாநிதி தலைவராகவும், நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும், எம்ஜிஆர் பொருளாளராகவும் பொறுப்பு வகிப்பது என முடிவானது. 

  1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து இன்று வரை திமுகவின் தலைவர் பொறுப்பில் உள்ள அவர் 49 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்து, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

  திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து அதிமுக, வைகோ பிரிந்து மதிமுக என்று பல கட்சிகள் உருவானாலும் திமுக எனும் இயக்கத்தின் தொண்டர்களை கட்டுக்குலையாமல் தலைவராக கருணாநிதி காத்து வந்துள்ளார். தேசிய கட்சிகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்து விட்டு அதே கட்சிகள் உடன் அவர் கூட்டணி வைக்கும் சூழலை பலரும் விமர்சித்துள்ளனர்.  ஆனால், விமர்சனங்களை தனது வளர்ச்சிக்கு உரமாக போட்டு எதிர்ப்பாளர்களை வாயை மூட வைக்கும் உத்தி கருணாநிதிக்கே வாய்த்த ஒன்று. தற்போது, உடல்நலக்குறைவால் வீட்டில் அவர் ஓய்வில் இருந்தாலும் கருணாநிதியுன் பழைய சுறுசுறுப்புக்கும், வேகத்துக்கும் யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை.

  கருணாநிதி தலைவராக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும் என முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்:-

  கட்சி இதுவரை பல தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இமாலய வெற்றியை ஈட்டியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.

  1977 முதல் 1989 வரை திமுக ஆட்சியில் இல்லாத 13 ஆண்டுகளிலும் திமுக தலைவர் கருணாநிதி கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். 1989-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே பல திட்டங்களைத் தீட்டியதுடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் திமுகவுக்குத் தொடர்பிருப்பிதாக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது.

  தேர்தல்களில் தோல்வியே காணாதவராக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. 13 தேர்தல்களில் பல தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். 1957-ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வுசெய்யப்பட்டார். அதிலிருந்து அனைத்து தேர்தல்களில் வெற்றிவாகை சூடியுள்ளார்.

  என அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவரின் 3 கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.
  நெல்லை:

  நெல்லை மேலப்பாளையம் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் சுபேர் அகமது (வயது45). இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

  இவர் தனது வீட்டுக்கு எதிரே நேற்று இரவு 3 கார்களை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக 3 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்த சுபேர் அகமது, உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரி ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

  ஆனாலும் 3 கார்களும் தீயில் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. அதிர்ஷ்டவசமாக தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் எரிந்து நாசமான 3 கார்களின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

  இதுகுறித்து சுபேர் அகமது மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் மேலப்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஜமாத் நிர்வாகிகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். நேற்று மேலப்பாளையத்தில் இறந்தவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கும், சுன்னத் ஜமாத் நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசார் இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.

  இந்த பிரச்சினையின் எதிரொலியாக தவ்ஹீத் ஜமாத்தின் கிழக்கு மாவட்ட தலைவர் சுபேர் அகமதுவின் 3 கார்களும் தீவைத்து எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

  இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி நாளை பதவியேற்கவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #KarnatakaDeputyCM
  பெங்களூரு:

  மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி நாளை கர்நாடக மாநில முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க. ஆட்சி நடைபெறாத மாநிலங்களை சேர்ந்த கட்சி தலைவர்களும், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டவர்களும் பங்கேற்கின்றனர்.  முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் நாளை புதிதாக அமையும் மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல் மந்திரி பதவி கிடைக்கலாம். இதுதவிர சில முக்கிய துறைகளுக்கான மந்திரி பதவியும் தங்களது கட்சியை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் என கர்நாடக மாநில காங்கிரசார் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

  இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று எழும்பியுள்ளது.

  இதுதொடர்பாக, கர்நாடக மாநில முஸ்லிம்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினராக 7 முறை பதவி வகித்துள்ள சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் என்பவரை துணை முதல் மந்திரியாக நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தங்களது கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மூத்த காங்கிரஸ் முஸ்லிம் தலைவரும், கர்நாடக சட்ட மேல்சபை உறுப்பினருமான ஒருவர் கூறியதாவது:-

  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு முஸ்லிம்கள் பாரபட்சமின்றி அளித்த வாக்குகள்தான் காரணம். எனவே, சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரோஷன் பேக் அல்லது முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவருக்கு துணை முதல் மந்திரி பதவியை கட்சியின் தலைமை அளிக்க வேண்டும்.

  காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்களான நாங்கள் நிறைய தியாகங்களை செய்திருக்கிறோம். அதனால், எங்களை சேர்ந்தவர் முதல் மந்திரியாக வேண்டும் என்று இப்போது வலியுறுத்துகிறோம். எங்களது பங்களிப்பையும், ஆதரவையும் அங்கீகரிக்க தவறினால் காங்கிரசுக்கு முஸ்லிம் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaDeputyCM
  ×