search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில், மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் கைது - தலைவர்கள் மீதான தாக்குதல் திட்டம் முறியடிப்பு
    X

    தெலுங்கானாவில், மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் கைது - தலைவர்கள் மீதான தாக்குதல் திட்டம் முறியடிப்பு

    தெலுங்கானாவில் மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் கைது செய்யப்பட்டதன் மூலம் தலைவர்கள் மீதான தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் தெரிவிதுள்ளது. #MaoistLeader #Arrest #Telangana
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாத்ரத்ரி-கோதாகுடம் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில், மாவோயிஸ்ட்டு பெண் தலைவர் பிடிபட்டார்.

    அவர் பெயர் பி.ரூபா என்ற சுஜாதா. மாவோயிஸ்ட்டு இயக்கத்தின் மண்டல குழு செயலாளராக பதவி வகித்து வருகிறார். தெலுங்கானாவில் பல்வேறு மாவட்டங்களில், கொலை, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட குற்றங்களை செய்துள்ளார். 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கிறார். இவருடைய கணவரும் மாவோயிஸ்ட்டு இயக்கத்தின் முக்கிய பிரமுகர்தான்.

    ரூபாவை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தன. தெலுங்கானாவில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சமீபத்தில் நடந்த மாவோயிஸ்ட்டு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ரூபா கூறினார். இதற்காக, தாக்குதல் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    ரூபா கைது மூலம், இந்த திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், தாக்குதல் குழுவினரின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு, போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சுனில்தத் கூறினார்.
    Next Story
    ×